Tamil News  /  Entertainment  /  Kamlahaasan Discharged After Treament In Private Hospital
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய கமல் (கோப்புபடம்)
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய கமல் (கோப்புபடம்)

Kamalhaasan discharged: சிகிச்சைக்கு பின் நலமுடன் வீடு திரும்பினார் கமல்

24 November 2022, 14:09 ISTMuthu Vinayagam Kosalairaman
24 November 2022, 14:09 IST

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன், சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சாப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,"காய்ச்சல் காரணமாக நடிகர் கமல்ஹாசன் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சையில் அவர் தற்போது நலமாக உள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

சிகிச்சை முடிந்த பின்னர் இன்று காலை கமல்ஹாசன் வீடு திரும்பியுள்ளார். சிறிது ஓய்வுக்கு பின்னர் இந்தியன் 2, பிக் பாஸ் படப்பிடிப்பில் அவர் பங்கேற்பார் என அவருக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, பழம்பெரும் இயக்குநர் கே. விஸ்வநாத் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க ஹைதரபாத் சென்றிருந்தார் கமல்ஹாசன். அங்கு அவரை சந்தித்து, இயக்குநர் விஸ்வநாத் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டார். இதன்பின்னர் சென்னை திரும்பியபோது சோர்வாக இருந்த கமல், காயச்சல், சளி ஏற்படவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

டாபிக்ஸ்