32 Years of Singaravelan : காதல், காமெடி, ஆக்சன், சென்டிமென்ட்.. கமர்சியல் ட்ரீட்.. 32 ஆம் ஆண்டில் சிங்காரவேலன்!
32 Years of Singaravelan : சிங்காரவேலன் திரைப்படம் கமர்சியல் ட்ரீட்டாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் விதமாக அமைந்திருக்கும். முக்கியமாக இந்த படத்தில் காதல்,நகைச்சுவை, ஆக்சன் சென்டிமென்ட் என அனைத்து வகை உணர்வுகளும் நமக்கு கிடைக்கும்

ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிங்காரவேலன். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், குஷ்பூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை பொன்னடியான், ஆர்வி உதயகுமார், வாலி ஆகியோர் எழுதி இருப்பார்கள்.
இப்படத்தில் கமலஹாசன் சிங்காரவேலன் என்ற கதாபாத்திரத்திலும், குஷ்பூ சுமதி என்ற கதாபாத்திரத்திலும், ஜெய்சங்கர் ஜெனரல் நடராஜன் என்ற கதாபாத்திரத்திலும், மனோரமா தாயம்மா கதாபாத்திரத்திலும், பாடகர் மனோ மனோ என்ற கதாபாத்திரத்திலும், கவுண்டமணி டிரம்ஸ் மணி என்ற கதாபாத்திரத்திலும், வடிவேலு சுபா என்ற கதாபாத்திரத்திலும், சார்லி ராமசாமி என்ற கதாபாத்திரத்திலும், சுமித்ரா பார்வதி என்ற கதாபாத்திரத்திலும்,விஜயகுமார் வேலனின் அப்பாவாக சிறப்பு தோற்றத்திலும் நடித்திருப்பார்கள்.
இப்படம் கமர்சியல் ட்ரீட்டாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் விதமாக அமைந்திருக்கும். முக்கியமாக இந்த படத்தில் காதல்,நகைச்சுவை, ஆக்சன் சென்டிமென்ட் என அனைத்து வகை உணர்வுகளும் இந்த படத்தில் நமக்கு கிடைக்கும். அந்த அளவிற்கு கமர்சியல் ட்ரீட்டாக அமைந்த இப்படம் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகி செம ஹிட்டானது.
இந்தப் படத்திற்கு பஞ்சு அருணாச்சலம் கதை திரைக்கதை அமைத்து கொடுத்தார். சின்ன கவுண்டர் படத்தை இயக்கியதற்குப் பிறகு ஆர்பி உதயகுமாரின் இயக்கத்தில் இப்படம் வெளியாக இருந்ததால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு மக்களுக்கு அதிகமாகவே இருந்தது.
ஏனெனில் சின்ன கவுண்டர் படம் செம ஹிட் படமாக அமைந்ததை அடுத்து அவரின் இரண்டாவது படம் இது என்பதால் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாகவே இருந்தது. இப்படம் ஆனது கிராமத்தில் தொடங்கி நகரத்திற்கு சென்று மீண்டும் கிராமத்தில் முடியும் வகையில் அமைந்திருக்கும். குறிப்பாக கமல் குஷ்பூவை இம்ப்ரஸ் செய்வதற்காக செய்யும் சில விஷயங்கள் செம ஃபன் ஆக இருக்கும். முறை பெண்ணான குஷ்புவின் சிறுவயது போட்டோவை வைத்து கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் அவர் இப்போது எப்படி இருப்பார் என கண்டுபிடிக்கும் காட்சி முதல் குஷ்பூவை காதலிக்க வைக்க தனக்கு அடிபட்டது போல் உடல் முழுவதும் பேண்டேஜ் ஒட்டிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காட்சி வரை கலகலப்பாகவே நம்மை கொண்டு செல்லும் இந்த படம்.
பொதுவாக நகைச்சுவைக்கு லாஜிக் தேவையில்லை என்கிற பேச்சு உண்டு. ஆனால் இதில் ஏக்கர் கணக்கில் இடம்பிடித்த லாஜிக் மீறல்கள் சிரிக்க வைத்ததோடு, இப்போதும் ரசிக்கப்பட்டு வருகிறது.
இளையராஜா இசையில் பாடல்கள் ஒன்றும் அவ்வளவு அற்புதமாக அமைந்திருக்கும். குறிப்பாக
”போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதுல ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் எக்ஸ்ப்ரஸ்
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்
வேலன் வேலை சக்ஸஸ்
இனி காலை மாலை கிஸ் கிஸ்” இப்பாடலை வாலி எழுதி இருப்பார். மனோ, கமல்ஹாசன் பாடி இருப்பார்கள்.
அதேபோல,
”சொன்ன படி கேளு
மக்கர் பண்ணாத எத்தனை
வேலை இருக்கு அத்தனையும்
உங்கப்பனா செய்வான் நான்
தான செய்யணும் காலைல
தோப்பு போய்ட்டு போனது
வந்தது பாக்கணும் அப்றம்
இங்க வந்து தவுடு வைக்கணும்’ இந்த பாடலையும் வாலி தான் எழுதி இருப்பார். கமல்ஹாசன் பாடி இருப்பார். இந்தபாடலும் செம ஹிட். படமும் பாடலும் செம ஹிட்டான இப்படம் வெளியாகி இன்றுடன் முப்பத்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது.

டாபிக்ஸ்