Kamal, Rajini: அப்படி ஒரு நட்பு.. 20 வயதில் போடப்பட்ட டீல்.. கடைசி வரை மாறாமல் இருக்கும் ரஜினிகாந்த், கமல் ஹாசன்
Kamal, Rajini: நட்சத்திர ஹீரோக்களான பிறகு ரஜினிகாந்த், கமல் ஹாசன், வெள்ளித்திரையில் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை.

தமிழ் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்களான கமல் ஹாசனும், ரஜினிகாந்தும் திரைத்துறையில் நுழைந்தது முதல் நட்பாக இருக்கிறார்கள். அபூர்வ ராகங்கள், அவள் அப்படித்தான், 16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும், ஆடு புலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, அலாவுதீனும் அற்புத விளக்கும், நட்சத்திரம், உட்பட கிட்டத்தட்ட 16 படங்களில் ஒன்றாக இணைந்து நடித்து இருக்கிறார்கள்.
அவர்கள் கடைசியாக இணைந்து நடித்தது இந்தி திரைப்படமான Geraftaar. 1985 ஆண்டு வெளியான இந்த படத்தில் அவர்களுடன் இணைந்து அமிதாப் பச்சனுடன் நடித்து இருந்தார். எஸ். ராமநாதன் இந்த படத்தை தயாரித்து இருந்தார்.
கமல் ஹாசன் பேட்டி
நெருங்கிய பிணைப்பு இருந்த போதிலும் இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்கள். பலரும் தற்போது ஏன் கமல் ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஒன்றாக இணைந்து நடிப்பது இல்லை என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். மேலும் டாப் இரண்டு நட்சத்திரங்கள் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இதனிடையே சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கமல் ஹாசன் ஒரு நேர்காணல் வழங்கி இருந்தார். அப்போது அவரிடம் ஏன், ரஜினியுடன் இணைந்து நடிப்பது இல்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அவர் கூறுகையில், " இது புதிய கூட்டணி அல்ல. நாங்கள் இணைந்து பல படங்கள் நடித்து இருக்கிறோம். பிறகு ஒன்றாக வேலை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தோம். நாங்கள் இரண்டு போட்டியாளர்களைப் போல இல்லை. எங்கள் இருவருக்கும் ஒரே ஒரு குரு தான்.
போட்டி இல்லை
வேறு எந்த இடத்தையும் போல் இல்லாமல் எங்கள் இருவருக்கும் இடையே போட்டி கிடையாது. எங்களுக்கு ஒரே ஒரு குரு தான். நாங்கள் பொறாமை பட மாட்டோம். நாங்கள் ஒருவரையொருவர் பற்றி குறையோ அல்லது கமெண்ட் செய்யவோ கூடாது என்று 20 வயதாக இருந்த போதே பேசி முடிவு செய்து இருக்கிறோம். அதை இப்போது வரை கடைப்பிடித்து வருகிறோம். அது தான் எங்கள் நட்பின் ஆழாம் " என்றார்.
அதே போல் கமல் ஹாசன் இந்தி பார்வையாளர்கள் தன்னை ஏற்றுக் கொண்டு ஆதரவு கொடுத்ததற்கு நன்றி என்று கூறினார். கமல் ஹாசன் 1981 இல் ஏக் துயூஜே கே லியே என்ற இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படம் அவர் நடித்த தெலுங்கு மொழி படத்தின் ரீமேக் ஆகும். கே பாலச்சந்தர் இயக்கி இருந்தார். இந்தியன் 2 இன் இந்தி பதிப்பின் ட்ரெய்லர் நிகழ்வின் போது கமல் ஹாசன் தன்னால் எப்படி இந்தி பேச முடியவில்லை என்பதை நினைவு கூர்ந்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்