Indian 2 Trailer Update: கமல்ஹாசனின் இந்தியன் - 2 டிரைலர் ரிலீஸ் எப்போது?.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Indian 2 Trailer Update: லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தியன் -2 படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், தற்போது டிரைலர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் இந்தியன் - 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறாா். இதனால் இந்தியன் 2 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில், நடிகர் கமல்ஹாசனுடன் காஜல் அகா்வால், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனா்.
ஜூலை 12-ல் ரிலீஸ்
லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தியன் - 2 வரும் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சமீபத்தில் இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள "கதறல்ஸ்", "பாரா" என்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வைரலாகியது. இந்நிலையில், 'இந்தியன் 2' படத்தின் டிரைலர் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
