தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Kamal Hassan Speech In Kalaignar 100 Ceremony

Kamal Hassan: ’கலைஞரின் பண்பு முதலமைச்சரிடம்’ - கமல் ஹாசன் பேச்சு

Aarthi Balaji HT Tamil
Jan 07, 2024 09:29 AM IST

கலைஞர் 100 விழாவில் நடிகர் கமல் ஹாசன், கருணாநிதிக்கும் தனக்குமான பழக்கம் பற்றி பேசினார்.

கலைஞரின் பண்பு முதலமைச்சரிடம்
கலைஞரின் பண்பு முதலமைச்சரிடம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனையொட்டி, சென்னையில் நேற்று ( டிச. 6) பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின் ஜனவரி 6 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதே போல் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருந்த நிகழ்ச்சி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, வடிவேல், கார்த்தி, தனுஷ், பார்த்திபன், சிவகார்த்திகேயன், கன்னட ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் நடிகை நயன்தாரா, உள்ளிட்ட பல திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.

விழாவில் பேசிய கமல் ஹாசன், ” என்னடா ஒரு ஓரமாக நின்று பேசுகிறேன் என நினைக்கறீங்களா? கலைஞர் மேடையில் நான் எப்போதும் ஒரு ஓரமாக தான் நிற்பேன். 

கலைஞரும் தமிழும், கலைஞரும் சினிமாவும், கலைஞரும் அரசியலும் பிரிக்க முடியாத ஒன்று. எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய ஆளுமைகளை தன் எழுத்தால் உச்ச நட்சத்திரம் ஆக்கியவர் கலைஞர். பாடல்கள் பிடியில் இருந்த சினிமாவை வசனம் வசப்படுத்தியவர் கலைஞர். 

வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் கலைஞர் மக்களுடன் உரையாடுவதை விடவே கூடாது என நான் அவரிடம் கற்று கொண்டேன். அதை தான் பிக் பாஸ் மூலம் மக்களோடு பேசி கொண்டு இருக்கிறேன்.

கலைஞர் எப்போதும் தன்னை கலை உலகின் பிரதிநிதியாகவே காட்டிக்கொள்ள விரும்பினார்.  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பண்புக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். 

இந்த பண்பு எங்கிருந்து கற்று கொண்டது என்பது நமக்கு நன்றாகவே தெரியும். கலைஞரின் பண்பு முதலமைச்சரிடம் உள்ளது. கலைஞர் தான் நவீன தமிழ் சினிமாவின் வசன நிற்பி என்று சொன்னால் மிகை ஆகாது “ என்றார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.