Tamil News  /  Entertainment  /  Kamal Hassan Joins In Indian 2 Movie Shooting
இந்தியன் 2 படப்பிடிப்பு
இந்தியன் 2 படப்பிடிப்பு

Indian 2 from today: மீண்டும் தொடங்கிய இந்தியன் 2 படப்பிடிப்பு

22 September 2022, 12:32 ISTAarthi V
  • Share on Twitter
  • Share on FaceBook
22 September 2022, 12:32 IST

இந்தியன்-2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இன்று தொடங்கியுள்ளது. 

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு குஜராத்தில் தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து நடத்தி வந்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இதன் பின்னர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பின்ர் ஷங்கர்- லைகா நிறுவனம் இடையேயான கருத்து மோதல் ஏற்பட்டதால் படப்பிடிப்பு தள்ளிபோனது.

இதனிடையே நடிகர் உதயநிதி ஸ்டாலின், லைகா நிறுவனம் ஆகியோரோடு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டது. பஞ்சாயத்து அனைத்தும் முடிந்த நிலையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கமல் ஹாசன் மீண்டும் கலந்து கொண்டுள்ளார். இதனை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.

அவர் இயக்குநர் ஷங்கருடன் இருக்கும் சில புகைப்படங்கள் மற்றும் ஒரு சிறிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

முன்னதாக காஜல் அகர்வால் தனது சமூக வலைதளபக்கத்தில் படத்தின் படப்பிடிப்பிற்காக குதிரையுடன் பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • Share on Twitter
  • Share on FaceBook

டாபிக்ஸ்