Indian 2 Collection: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. இந்தியன் 2 ப்ரீ புக்கிங்கில் எத்தனை கோடி வசூல் செய்தது தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Indian 2 Collection: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. இந்தியன் 2 ப்ரீ புக்கிங்கில் எத்தனை கோடி வசூல் செய்தது தெரியுமா?

Indian 2 Collection: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. இந்தியன் 2 ப்ரீ புக்கிங்கில் எத்தனை கோடி வசூல் செய்தது தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Published Jul 12, 2024 09:40 AM IST

Indian 2 Collection: உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின்ப்ரீ புக்கிங் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியன் 2 ப்ரீ புக்கிங்கில் எத்தனை கோடி வசூல் செய்தது தெரியுமா?
இந்தியன் 2 ப்ரீ புக்கிங்கில் எத்தனை கோடி வசூல் செய்தது தெரியுமா?

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியாகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 படம், வெளியாகி இருப்பதை கமல் ஹாசன் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

படத்தை பார்த்த பலரும் எதிர்மறையான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதனால் வசூல் எந்த அளவிற்கு பாதிக்கும் என பயத்தில் படக்குழு இருப்பதாக சொல்லப்படுகிறது.

படக்குழு

சித்தார்த், சித்ரா வரதராஜனாக நடித்து உள்ளார். மற்ற குறிப்பிடத்தக்க வேடங்களில் ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், ஆர்த்தியாக பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம், இன்ஸ்பெக்டராக கிருஷ்ணசாமியாக நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், தம்பேஷ், குல்ஷன் குரோவர், ஜாகீர் ஆகியோர் நடித்து உள்ளனர்.

ஹுசைன், பியூஷ் மிஸ்ரா, அகிலேந்திர மிஸ்ரா, ஜெயபிரகாஷ், ஜி. மாரிமுத்து, ஜார்ஜ் மேரியன், வினோத் சாகர், யோகராஜ் சிங், ரேணுகா, கல்யாணி நடராஜன், சி. ரங்கநாதன், பெனடிக்ட் காரெட், ரவி வெங்கட்ராமன், சேரன்ராஜ், டெமி - லீ டெபோ ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்து உள்ளனர்.

இந்தியன் 2 பட வசூல்

இந்நிலையில் இந்தியன் 2 படம் உலகளவில் இது வரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 13 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியன் வசூல்

1996 ஆம் ஆண்டு வெளிவந்த கமல் ஹாசனின், இந்தியன் பட முதல் பாகத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வந்து உள்ளது. அதன் படி, உலகளவில் ரூ. 61 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து இருந்தது.

கமல் ஹாசன் மேக்கப்

இந்த வயதிலும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து செயற்கை மேக்கப்பை தயார் செய்து கொண்டார். மேலும், மாலை வரை அதே மேக்கப்பில் இருந்த அவர் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தியதாக படக்குழு தெரிவித்து உள்ளது.

இந்தியன் 2 பட்ஜெட் மற்றும் சம்பளம்

இந்தியன் 2 படம் சுமார் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. செய்திகளின் படி, கமல் ஹாசன், இந்தியன் 2 படத்தில் நடித்ததற்காக 150 கோடி ரூபாய் பெற்றார்.

லோகேஷ் கனகராஜின், விக்ரம் படத்திற்காக அவர் 50 கோடி ரூபாயும், பிரபாஸ் நடித்த 'கல்கி 2898 AD' படத்திற்காக 40 கோடி ரூபாயும் சம்பாதித்ததாக முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபோர்ப்ஸ் இந்தியாவின் அறிக்கை படி, கமல் ஹாசன் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.