Kamal Haasan Double Action Movies: இரட்டை வேடத்தில் கமல் நடித்த படங்கள் எத்தனை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kamal Haasan Double Action Movies: இரட்டை வேடத்தில் கமல் நடித்த படங்கள் எத்தனை

Kamal Haasan Double Action Movies: இரட்டை வேடத்தில் கமல் நடித்த படங்கள் எத்தனை

Aarthi V HT Tamil
Nov 07, 2022 02:50 PM IST

கமல் ஹாசன் தமிழ் சினிமாவில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்திய படங்களை இதில் காண்போம்.

இரட்டை வேடத்தில் கமல் நடித்த படங்கள்
இரட்டை வேடத்தில் கமல் நடித்த படங்கள்

இந்நிலையில் கமல் ஹாசன் தமிழ் சினிமாவில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்திய படங்களை இதில் காண்போம்.

அபூர்வ சகோதரர்கள்

இயக்குநர் சங்கீதம் ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான படம் 'அபூர்வ சகோதரர்கள்'. இதில் நடிகர் கமல் ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். 

கமல் உயரம் குறைந்த மனிதராக நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அதுவும் அவர் உயரம் குறைந்தவராக நடித்த காட்சிகள் 10 நாட்களில் 500 அடி நீளம் கொண்டதாக படமாக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், நாகேஷ், கௌதமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒரு கைதியின் டைரி 

1985 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான படம் ஒரு கைதியின் டைரி. இப்படத்தில் கமல் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

திரையரங்குகளில் சுமார் 175 நாட்கள் ஓடி இப்படம் வெற்றி படமாக அமைந்தது. கமல் ஹாசன் - டேவிட், சங்கர் (தந்தை, மகன் ) என இருவேடத்தில் நடித்து அசத்தி உள்ளார்.

அவ்வை சண்முகி

90ஸ், 2k கிட்ஸுக்கு கமல் படத்தில் மிகவும் பிடித்தமான படங்களில் ஒன்று அவ்வை சண்முகி. 1996 ஆம் ஆண்டு வெளியான இதை கே.எஸ். ரவிக்குமார் இயக்கினார். இத்திரைப்படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.  

கமல் ஹாசன் - பாண்டியன் மற்றும் அவ்வை சண்முகி என இரண்டு வேடத்தில் நடித்திருந்தார். அவர் அவ்வை சண்முகி பாத்திரத்தில் பெண் வேடமிட்டு கச்சிதமாக நடித்திருப்பார்.

இந்தியன்

இந்தியன் 1996-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

ஆளவந்தான்

முதன்முறையாக மோஷன் கிராஃபிக்ஸ் கேமிராவை பயன்படுத்தி ஆசியாவில் எடுக்கப்பட்ட படம்,  ஆளவந்தான். லைவ் சவுண்ட், மாறுபட்ட திரைக்கதை உள்ளிட்டவற்றால் வித்தியாசம் காண்பி எடுக்கப்பட்ட படம். 

ஆளவந்தான் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில், இரண்டு கமலும் சண்டைப் போடுவதை கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் மிகவும் சுவாரஸ்யமாக சுரேஷ் கிருஷ்ணா எடுத்து இருப்பார்.  

அப்ஹெ என்று இந்தியிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆங்கில பட இயக்குநருக்கே முன்மாதிரியாக ஆளவந்தான் படம் அமைந்தது.

கமல் ஹாசன் இதில் விஜயகுமார் பாத்திரத்தில் நடிப்பதற்காக NDA சென்று கிரஷ் பயிற்சி படிப்பை முறையாக படித்து முடித்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.