Indian2 Trailer: ‘காந்திய வழியில் நீங்க.. நேதாஜி வழியில.. விரலை சுழற்றும் கமல்ஹாசன்; இந்தியன் 2 ட்ரெய்லர் இங்கே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Indian2 Trailer: ‘காந்திய வழியில் நீங்க.. நேதாஜி வழியில.. விரலை சுழற்றும் கமல்ஹாசன்; இந்தியன் 2 ட்ரெய்லர் இங்கே!

Indian2 Trailer: ‘காந்திய வழியில் நீங்க.. நேதாஜி வழியில.. விரலை சுழற்றும் கமல்ஹாசன்; இந்தியன் 2 ட்ரெய்லர் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 25, 2024 07:15 PM IST

Indian2 Trailer: கமல் ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது.

Indian2 Trailer: ‘காந்திய வழியில் நீங்க.. நேதாஜி வழியில.. விரலை சுழற்றும் கமல்ஹாசன்; இந்தியன் 2 ட்ரெய்லர் இங்கே!
Indian2 Trailer: ‘காந்திய வழியில் நீங்க.. நேதாஜி வழியில.. விரலை சுழற்றும் கமல்ஹாசன்; இந்தியன் 2 ட்ரெய்லர் இங்கே!

கடந்த 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன் .

இரண்டாம் பாகத்தில் எழுந்த பிரச்சினை:

இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் - கமல் கூட்டணி எடுக்க முடிவு செய்த நிலையில், இந்தப்படத்தின் தயாரிப்பாளராக லைகா சுபாஷ்கரன் கமிட் ஆனார். ஆனால் படப்பிடிப்பில் நடந்த விபத்து, கொரோனா ஊரடங்கு, ஷங்கர் - தயாரிப்பாளர் இடையே நடந்த மோதல் ஆகியவை இந்தப்படத்தை தாமதப்படுத்தியது. அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சினையில் தலையிட, இருதரப்பும் சமாதானம் ஆகி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இந்தப்படத்தில் நடிகை காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் சமுத்திரக்கனி, ரோபா ஷங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அண்மையில், இந்தியன் 2 அறிமுக வீடியோ வெளியிடப்பட்டது. டீசரை பார்க்கும் போது இந்தியன் பாகம் ஒன்றில் மையக்கருவாக இருந்த லஞ்சம் வாங்குதலை மையப்படுத்தியே இந்தியன் பாகம் 2 ம் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது. இந்த நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. ஷங்கரின் பிரமாண்டமும், கமல்ஹாசனின் வித்தியாசமான தோற்றமும், அனிருத்தின் இசையும் ட்ரெயிலரை அழகாக மாற்றி இருக்கிறது. 

கமல்ஹாசன் பேச்சு 

இன்று இந்தப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன், “  “ ஒரு சினிமாவை செய்து விட்டு, அதனை இரண்டாவது முறையாகச் செய்யும் போது, அதனை அதே இயக்குநர் இயக்குவது என்பது எனக்குத் தெரிந்து, இரண்டு பேர் அதனை செய்திருக்கிறார்கள். ஒருவர் cecil b demille, இன்னொருவர் Alfred Hitchcock.

39 Steps என்ற படத்தை முதலில் கருப்பு, வெள்ளையாக எடுத்த Hitchcock, பின்னர் கலரில் எடுத்தார். அதே போல cecil b demille 10 commandments என்ற படத்தை முதலில் கருப்பு வெள்ளையாக எடுத்தார். பின்னர் அதனை கலரில் எடுத்தார். இன்று வரையிலும் அதனை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இப்போது அந்த பெருமை ஷங்கருக்கு கிடைத்திருக்கிறது. ஷங்கருக்கு கிடைத்திருப்பதால், தற்போது அது எனக்கும் கிடைத்திருக்கிறது. பியூ சின்னப்பா நடித்த உத்தமபுத்திரன் திரைப்படத்தில், சிவாஜி கணேசன் நடித்தார். ஆனால், அப்போது அவர் இல்லை.

எப்படியாவது ரிலீஸ் செய்வோம் சார்

நான் இந்தியன் 2 இரண்டாம் பாகத்தை பார்க்கிறேன். இந்தியன் முதல்பாகத்தின் டப்பிங்கின் போது, இதனை நாம் இரண்டாம் பாகமாக எடுக்கலாமே என்ற ஷங்கரிடம் கூறினேன். அப்போது இருந்த படபடப்பே எங்களுக்கு அப்போது அடங்கவில்லை. இந்தியன் முதல் பாகத்தை எப்படியாவது ரிலீஸ் செய்வோம் சார் என்று ஷங்கர் சொன்னார். இரண்டாம் பாகம் எடுப்பதற்கு இன்றும் கதைகள் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. லஞ்சம் இன்னும் அதிகமானதன் காரணமாகத்தான், இந்தியன் தாத்தாவின் இரண்டாவது வருகைக்கு பெரிய அர்த்தமே உருவாகி இருக்கிறது.

நன்றாக நடிக்கும் நடிகர்கள், நண்பர்கள் சிலர் இங்கு இல்லை. கடந்த தெருவில்தான் விவேக் தொடர்பான காட்சிகளை ஷங்கர் எடுத்துக்கொண்டிருந்தார். ஏதோ இப்போதுதான் நடந்தது போல இருக்கிறது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதற்கு இந்தியன் 1, 2 உதாரணம். இங்கு ரவி வர்மன், ஷங்கர் சாரும், கமல் சாரும் நினைத்தால் கூட இந்த மாதிரியான படத்தை எடுக்க முடியாது என்றார். அதனை நான் மறுக்கிறேன். எடுத்து இருக்கிறோம். அதுதான் இந்தியன் 3.

இந்தியன் 3

இவ்வளவு கால இடைவெளியை எடுத்துக்கொண்டதற்கு நாங்கள் காரணமல்ல. இயற்கை, விபத்துகள் என பலவை இடையூறாக வந்தன. அதிலிருந்து மீட்டு, இந்தியன் தாத்தாவை தோளில் தூக்கி வந்த லைகா நிறுவனத்திற்கும், ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திற்கும் இந்தியன் 2 -வும், 3 யும் கடமை பட்டு இருக்கிறது” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.