த்ரிஷாவை வைத்து வாழைப்பழ ஜோக் சொன்ன கமல்.. வரிந்து கட்டி வரும் நெட்டிசன்கள்.. என்ன தான் ஆச்சு?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  த்ரிஷாவை வைத்து வாழைப்பழ ஜோக் சொன்ன கமல்.. வரிந்து கட்டி வரும் நெட்டிசன்கள்.. என்ன தான் ஆச்சு?

த்ரிஷாவை வைத்து வாழைப்பழ ஜோக் சொன்ன கமல்.. வரிந்து கட்டி வரும் நெட்டிசன்கள்.. என்ன தான் ஆச்சு?

Malavica Natarajan HT Tamil
Published Apr 21, 2025 08:11 PM IST

தக் லைஃப் பட விழாவில் நடிகை த்ரிஷாவை வைத்து கமல் கூறிய வாழைப்பழ ஜோக் நெட்டிசன்களிடையே அதிகப்படியான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

த்ரிஷாவை வைத்து வாழைப்பழ ஜோக் சொன்ன கமல்.. வரிந்து கட்டி வரும் நெட்டிசன்கள்.. என்ன தான் ஆச்சு?
த்ரிஷாவை வைத்து வாழைப்பழ ஜோக் சொன்ன கமல்.. வரிந்து கட்டி வரும் நெட்டிசன்கள்.. என்ன தான் ஆச்சு?

கமல்ஹாசன் த்ரிஷாவிடம் என்ன சொன்னார்?

த்ரிஷா தனக்குப் பிடித்த உணவு பற்றிப் பேசினார். அப்போது, “எல்லாமே எனக்குப் பிடிக்கும், ஆனா வேக வைத்த வாழைப்பழம் ரொம்பப் பிடிக்கும். அதோட பேரு?” என்று கேட்டார். அப்போது பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் 'பழம்புரி' எனக் கூறினர். இதைக் கேட்ட த்ரிஷாவும் ஆமாம் அது ரொம்ப பிடிக்கும் என்றார். சிறிது நேரம் கழித்து, கமல் “பெயர் சொல்லத் தெரியாது. ஆனா வாயில நுழைஞ்சிறும்” என்றார்.

சமாளித்த கமல்

இவர் இப்படி பேசியதைக் கேட்டதும் பலரும் சிரிக்கத் தொடங்கினர். த்ரிஷாவும் நிலைமையை சிரித்து சமாளித்தார். பின், சில வினாடிகள் கழித்து கமல் த்ரிஷாவின் முழங்காலில் தட்டிக் கொடுத்து, இது ஜோக் என்று தெளிவுபடுத்தினார். அவர்களது இந்த உரையாடல் தற்போது X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் வைரலாகி வருகிறது.

கமலின் ஜோக்கிற்கு கண்டனம்

இந்த ஜோக் இணையத்தில் ஒரு பிரிவினரிடையே நல்ல வரவேற்பைப் பெறவில்லை. ஒரு X பயனர் வீடியோவின் கீழ், “யோவ் யோவ் யோவ்” என்று கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், “டாக்சிக் கமல்” என்று கூறினர்.

இன்னும் ஒருவர், த்ரிஷா மன்சூர் அலி கான் கருத்துக்கு எதிராக எப்படி ரியாக்ட் செய்தாரோ அதேபோல இதற்கும் புகார் அளிப்பாரா என்று கேட்டுள்ளார். “18+ டாவ்வ்” என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கமலுக்கு ஆதரவு குரல்

ஆனால், சில ரசிகர்கள் கமலின் கருத்துக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். ஒருவர், “அழுக்கு இருக்குற இடத்தைத்தான் அழுக்கு தேடுது. கமல் சக நடிகர்களைப் பற்றி அவர் பலமுறை இப்படித்தான் கூறுவார். எதுவும் அவமரியாதையாக இல்லை” என்று ஒருவர் எழுதியுள்ளார்.

மற்றொருவர், “இதில் என்ன இரட்டை அர்த்தம் இருக்கு? கமல்ஹாசன் நகைச்சுவையாகத்தான் சொன்னார் என்பது தெளிவாகத் தெரிகிறது, ஆனால் அவர் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் தவறாக இருந்தன. பின்னர் அவர் அதை உணர்ந்து திரிஷாவைத் தட்டிக் கொடுத்தார். சூழ்நிலையை சமாளிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றொரு தலைப்புக்கு மாறியது பாராட்டத்தக்கது” என்று எழுதியுள்ளார்.

தக் லைஃப் படம்

மணிரத்னத்தின் 'தக் லைஃப்' படத்தில் கமல், சிலம்பரசன், த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர், அலி ஃபஜல், பங்கஜ் திரிபாதி, சாண்யா மால்ஹோத்ரா, ரோஹித் சாரஃப் மற்றும் வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 'நாயகன்' (1987) படத்திற்கு பிறகு கமல் மற்றும் மணிரத்னம் இணைந்து இயக்கும் இரண்டாவது படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது