தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Kamal Haasan Who Predicted The Corona Virus Before Says Actress Rekha

Actress Rekha : கொரோனா வைரஸை முன்பே கணித்த உலக நாயகன் கமல் ஹாசன்.. ஷாக்கான ரகசியம் சொன்ன நடிகை ரேகா!

Aarthi Balaji HT Tamil
Mar 09, 2024 07:06 AM IST

Kamal Haasan: குணா அப்போது சராசரி படம். ஆனால் கமல் சார் இந்த படம் இருபது, முப்பது வருடங்கள் கழிந்தாலும் பேசப்படும் என்று கூறியிருந்தார். இப்போது அது நடந்தது என நடிகை ரேகா தெரிவித்து உள்ளார்.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்

ட்ரெண்டிங் செய்திகள்

கமல் ஹாசன் நடித்த குணா படத்தின் படப்பிடிப்பு நடந்த குகைக்குள் நடந்த சம்பவத்தால் படம் கவனம் பெற்று இருக்கிறது.

நடிகை ரேகா, குணா படத்தில் ரோஸியாக நடித்தவர். அவர் கூறுகையில், ”குணா படம் வெளியான சமயத்தில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால் இந்த படம் இருபது வருடங்களுக்கு பிறகு பேசப்படும் என்று கமல் ஹாசன் கூறியிருந்தார். அதே தான் நடந்தது. கொரோனா என்ற வைரஸ் வரும் என்றும் அவர் கூறியதாக ஆவணம் வெளிப்படுத்துகிறது.

மஞ்சும்மல் பாய்ஸைப் பார்த்ததும், குணா படத்தில் நடித்த நினைவுகளுக்கு என்னை அழைத்துச் சென்றது. குணாவுக்கும், மஞ்சும்மல் பாய்ஸுக்கும் எந்த உறவும் இல்லை. ஆனால் அந்தப் பாடலைக் கேட்கும் போதே நமக்குள் ஒரு சிலிர்ப்பு வரும். அதைக் கேட்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அந்தப் பாடலில் நான் இல்லையென்றாலும், அந்த படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கொஞ்ச நாள் முன்னாடி கமல் சார் சொன்னாரு, எல்லாத்தையும் பாரு, கொஞ்ச நாள் கழிச்சு கொரோனா வைரஸ் என்று ஒரு வைரஸ் வரப் போகுது என சொன்னார் அதுவும் நடந்தது.

குணா படம் சூப்பர் ஹிட் ஆகவில்லை. குணா அப்போது சராசரி படம். ஆனால் கமல் சார் இந்த படம் இருபது, முப்பது வருடங்கள் கழிந்தாலும் பேசப்படும் என்று கூறியிருந்தார். இப்போது அது நடந்தது. அவர் ஒரு பெரிய மனிதர். நான் சந்தானபாரதி சாரிடம், “சார் கமல் சார், அப்போது சொன்னது போல் இப்போது நடந்திருக்கிறது. இந்தப் படத்தில் அந்தப் பாடல் வரும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது பாருங்கள் என சொன்னேன்.

படத்தில் காதலனுக்காக பாடப்பட்ட பாடல் என்றாலும் நண்பர்களுக்காகவும் பாடலாம். அவ்வளவு அழகான பாடல் இது. குணா படத்தில் நடிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். சில நாட்களுக்கு பிறகு கமல் சாரை பார்த்தேன். 'அம்மா எப்படி இருக்காங்க? என கேட்டார்' நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும். இந்தப் படத்தின் டைரக்ஷன், போட்டோகிராபி, குகைக்குள் இறங்குவது, கொடைக்கானலில் லொகேஷன், எடிட்டிங் எல்லாமே நல்லா இருக்கு. படத்தின் நடிகர்கள் மிகவும் பொருத்தமான நபர்களை தேர்வு செய்துள்ளனர். எல்லோரும் மிக அழகாக நடித்திருக்கிறார்கள். அது மிகவும் இயல்பாக இருந்தது.

க்ளைமாக்ஸ் பார்த்ததும் கை தட்டாமல் இருக்க முடியவில்லை. மஞ்சும்மாள் பாய்ஸ் இயக்குநருக்கு என் பாராட்டுகள். ரொம்ப நல்ல படம், எல்லாரும் தியேட்டருக்குப் போய் இந்தப் படத்தைப் பார்க்கணும் “ என கூறினார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்