STR48: தொட்டு வைத்த கமல் கை.. மிரட்டல் லுக்கில் சிலம்பரசன்.. வெளியானது STR 48 போஸ்டர்!
இந்தப்படத்திற்காக தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மார்சியல் ஆர்ட்ஸ் கற்றார் நடிகர் சிலம்பரசன்.
பிரபல நடிகரான சிலம்பரசன் தற்போது தன்னுடைய 48 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்தப்படத்திற்காக தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மார்சியல் ஆர்ட்ஸ் கற்றார் நடிகர் சிலம்பரசன். இந்தப்படம் ஆரம்பித்து பூஜை போட்ட பின்னர் படம் தொடர்பாக பெரிதான எந்த அப்டேட்டும் வெளியாக வில்லை.
இதனால் இந்தப்படம் ட்ராப் ஆனதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், நாளை கொண்டாடப்படும் நடிகர் சிலம்பரசனின் பிறந்த நாளை முன்னிட்டும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் எஸ்.டி.ஆர் 48 படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதனை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டு இருக்கிறார்.
டாபிக்ஸ்