கர்நாடகாவில் வெளியாகிறதா கமல் ஹாசனின் 'தக் லைஃப்'? கன்னட அமைப்புகளின் நிலைப்பாடு என்ன?
கமல் ஹாசனின் சர்ச்சைக் கருத்தால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகாமல் இருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை அடுத்து அங்கு படம் வெளியாக உள்ளது.

கர்நாடகாவில் வெளியாகிறதா கமல் ஹாசனின் 'தக் லைஃப்'? கன்னட அமைப்புகளின் நிலைப்பாடு என்ன?
கன்னட அமைப்பான கர்நாடக ரக்ஷனா வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவதற்கு தங்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறினார்.
கர்நாடக ரக்ஷனா வேதிகே நிலைப்பாடு
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி, கன்னட மொழி தமிழ் மொழியிலிருந்து தோன்றியது என்று கமல் ஹாசன் கூறிய கருத்துகளுக்கு அவர் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், கமல் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றார், நீதிமன்றத்தின் உத்தரவை அவர்கள் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.