Dasavatharam: பத்து அவதாரம்.. சுனாமி காட்சி இல்லாத கிளைமாக்ஸ்.. உரிமையை விட்டுக் கொடுத்த கமல்ஹாசன்
Dasavatharam: நடிகர் கமல்ஹாசன் வரலாற்றில் தவிர்க்க முடியாத வரலாற்று திரைப்படமாக இந்த தசாவதாரம் திரைப்படம் அமைந்துள்ளது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் ஆரம்பித்து 2004ல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய சுனாமி வரை ஒரு கால பயணத்தை இந்த திரைப்படம் மேற்கொண்டிருக்கும்.

Dasavatharam: இந்தப்படத்தில் கமல் 10 வேடங்களில் நடித்திருப்பார். ரங்கராஜ நம்பி என்ற வைணவர், கோவிந்த் ராமசாமி என்ற உயிரித் தொழில்நுட்ப அறிவியலாளர், நாத்திகர், கிறிஸ்டியன் பிளெட்சர் - சிஐஏ அமைப்பின் முன்னாள் ஊழியர், கொலையாள், பல்ராம் நாயுடு - தெலுங்கு RAW அதிகாரி, கிருஷ்ணவேணி - சித்தம் பிறழ்ந்த பாட்டி, வின்சென்ட் பூவராகன் - தலித் தலைவர், சுற்றுச்சூழல் போராளி, அவதார் சிங் - பஞ்சாபி பங்கரா பாடகர் கலிஃபுல்லா கான் – இசுலாமியர், ஷிங்கென் நரஹஷி - ஜப்பானிய யயுற்சு தற்காப்புக் கலை வீரர், ஜார்ஜ் புஷ் - ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் என்ற அனைத்து வேடங்களிலும் ஒவ்வொரு விதமாக கலக்கியிருப்பார்..
அமெரிக்க நிறுவனம் ஒன்றில் உயிரித் தொழில்நுட்ப அறிவியலாளர் கண்டுபிடித்த கிருமி ஒன்று தீய சக்திகளின் கைகளில் சிக்கிவிடும்.
அந்த கிருமியை கைப்பற்றி உலகில் அழிவை ஏற்படுத்த அவர்கள் திட்டமிடுவார்கள். அதை தடுக்க அறிவியலாளர் கமல் அதை துரத்தி வருவார். தீவிரவாதிகளும் அந்த கிருமியை கைப்பற்ற திட்டமிடுகிறார்கள். இதற்கிடையில் அறிவியலாளர் கமல் எப்படி அதை கண்டுபிடித்து, என்ன செய்தார் என்பது மீதி கதை.
அமெரிக்காவில் துவங்கிய கதை இந்தியாவில் முடியும். கிருமியில் தொடங்கிய கதை சுனாமியில் முடிவடையும். கதையின் கோர்வை மிக நன்றாக இருக்கும்.
12ம் நூற்றாண்டில் சோழ அரசன், கோவிந்தராஜர் சிலையுடன் ரங்கராஜ நம்பியைப் பிணைத்து நடுக்கடலுக்கு எடுத்துச்சென்று வீசும் காட்சிகள், இறுதியில் சுனாமி காட்சிகள் போன்ற சிறப்பு காட்சிகள் அமெரிக்க வல்லுனர் பிறையன் ஜென்னிங்க்ஸ் மேற்பார்வையில் சென்னை வரைகலை, நுட்பக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டன. இந்தக்காட்சிகள் அந்தப்படம் வெளியான காலத்தில் பெருமளவில் பாராட்டு பெற்றன.
படபடவென பேசியே அசின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்தப்படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்கியிருப்பார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருப்பார். படத்தின் கதை கமல்ஹாசன், சுஜாதா, கிரேசி மோகன் ஆகியோர் சேர்ந்து எழுதியிருப்பார்கள்.
ஆன்மிகம், அறிவியல் கலந்து வித்யாசமான கதையம்சம். படத்தின் இசை ஹிமேஷ் ரேஷாமியா அமைத்திருந்தார். அனைத்து பாடல்களும் படு ஹிட்.
உலக நாயகனே பாடல் கமலை ப்ரமோட் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். கல்லை மட்டும் கண்டால் கடவுள் கிடையாது என்ற பாடல், ஓ…ஓ…சனம் கொண்டாட்டமான பாடல், முகுந்தா, முகுந்தா, கிருஷ்ணா, முகுந்தா பாடல் நல்ல மெலடி பாடல், கா கருப்பனுக்கும் ஆகிய அனைத்து பாடல்களும் இன்றளவும் ஹிட்டான பாடல்.
நடிகர் கமல்ஹாசன் வரலாற்றில் தவிர்க்க முடியாத வரலாற்று திரைப்படமாக இந்த தசாவதாரம் திரைப்படம் அமைந்துள்ளது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் ஆரம்பித்து 2004ல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய சுனாமி வரை ஒரு கால பயணத்தை இந்த திரைப்படம் மேற்கொண்டிருக்கும்.
பட்டாம்பூச்சி விளைவுகளின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும். உலகத்தின் மூலைகளில் எங்கெங்கோ நடக்கக்கூடிய சம்பவங்கள் அனைத்தும் ஒற்றைச் சம்பவத்தை தொடர்புப்படுத்தும் என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
தமிழ் விட்டுக் கொடுத்த உரிமை ஒத்துழைப்பால் தான் சாத்தியமாகும். படத்தின் இறுதி கட்டத்தில் சுனாமி காட்சிகள் அதிக பட்ஜெட் வருகின்ற காரணத்தினால் தவிர்க்க வேண்டும் என பட குழு முடிவு எடுத்தது. ஆனால் சுனாமியை தவிர்த்து விட்டால் இந்த திரைப்படம் வீணாகிவிடும் அதனால் சுனாமி காட்சிகள் கட்டாயம் வேண்டும் என இயக்குனர் கேஸ் ரவிக்குமார் பிடிவாதமாக இருந்துள்ளார். அதற்குப் பிறகு இந்த திரைப்படத்தில் விற்பனையில் தனக்கு இருந்த உரிமைகளை தயாரிப்பாளர்களுக்காக கமல்ஹாசன் விட்டுக் கொடுத்து ஒரு கோடி ரூபாய் செலவு செய்து அந்த சுனாமி காட்சிகளை எடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
