தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kamal Haasan Indian 2: ‘நீ கலக்கு அனி’ ‘தாய் மண் மேல் ஆணை; தமிழ் மானத்தின் சேனை’ - இந்தியன் 2 முதல் பாடல் இங்கே!

Kamal Haasan Indian 2: ‘நீ கலக்கு அனி’ ‘தாய் மண் மேல் ஆணை; தமிழ் மானத்தின் சேனை’ - இந்தியன் 2 முதல் பாடல் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
May 22, 2024 05:59 PM IST

Kamal Haasan Indian 2: கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. பாடல் வீடியோ உள்ளே!

Kamal Haasan Indian 2: ‘நீ கலக்கு அனி’   ‘தாய் மண் மேல் ஆணை; தமிழ் மானத்தின் சேனை’ - இந்தியன் 2 முதல் பாடல் இங்கே!
Kamal Haasan Indian 2: ‘நீ கலக்கு அனி’ ‘தாய் மண் மேல் ஆணை; தமிழ் மானத்தின் சேனை’ - இந்தியன் 2 முதல் பாடல் இங்கே!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பாரா’ பாடல் வெளியாகி இருக்கிறது. பா.விஜயின் வரிகளில் வெளியாகி இருக்கும் இந்தப்பாடலை இசையமைப்பாளர் அனிருத்தும், சரிகமபா புகழ் பாடகி ஸ்ருதிகா சமுத்ராலாவும் பாடியிருக்கிறார்கள். கடந்த 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன் . 

இரண்டாம் பாகத்தில் எழுந்த பிரச்சினை: 

 

இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் - கமல் கூட்டணி எடுக்க முடிவு செய்த நிலையில், இந்தப்படத்தின் தயாரிப்பாளராக லைகா சுபாஷ்கரன் கமிட் ஆனார். ஆனால் படப்பிடிப்பில் நடந்த விபத்து, கொரோனா ஊரடங்கு, ஷங்கர் - தயாரிப்பாளர் இடையே நடந்த மோதல் ஆகியவை இந்தப்படத்தை தாமதப்படுத்தியது. அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சினையில் தலையிட, இருதரப்பும் சமாதானம் ஆகி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இந்தப்படத்தில் நடிகை காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் சமுத்திரக்கனி, ரோபா ஷங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அண்மையில், இந்தியன் 2 அறிமுக வீடியோ வெளியிடப்பட்டது. டீசரை பார்க்கும் போது இந்தியன் பாகம் ஒன்றில் மையக்கருவாக இருந்த லஞ்சம் வாங்குதலை மையப்படுத்தியே இந்தியன் பாகம் 2 ம் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது.

அனியின் கனவு: 

 

முதல் பாகத்தில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றி இருந்த நிலையில், இதில் அனிருத் இசையமைத்து இருக்கிறார். பல மேடைகளில் ஷங்கரின் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறி வந்த நிலையில், அந்த ஆசை இந்தப்படத்தில் நிறைவேறி இருக்கிறது. இந்தப்படம் அடுத்த மாதம் 12ம்  தேதி வெளியாக இருக்கிறது. 

இந்தியன் 2 புரோமோஷனில் தோனி பற்றி பேசிய கமல்: 

 

‘இந்தியன் 2’ படத்தை விளம்பரப்படுத்த, ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸில் சேனலில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் அவர் தோனியை பற்றி பேசும் போது, தோனியை விவரிக்க கமல் equipoise ( சமநிலை) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

தொடர்ந்து தோனியை பற்றி பேசிய கமல், "அவரது நட்சத்திர அந்தஸ்தை மறந்து விடுங்கள். அந்த மனிதரின் அசாத்திய முயற்சியை பாருங்கள்.அவர் எங்கே தொடங்கினார். ஒரு இளம் கல்லூரி இளைஞன், கிரிக்கெட் வீரராக மாறிய வழக்கமான கதை அல்ல அது.

அவர் அப்படியானவர் 

நான் பட்டோடி நவாப், நாரி காண்ட்ராக்டர், ஜெய்சிம்ஹா ஆகியோரின் காலங்களைப் பற்றி பேசுகிறேன். அவர்கள் அனைவரும் உயர்தட்டு மக்கள் ஆவர். அப்போது உள்ளூர் கிரிக்கெட் உச்சத்தில் இருந்த நேரத்தில், எங்கோ ஒரு சிறிய கிராமத்தில் இருந்து இந்த தோனி வந்தார். இதற்கும் அவர் தன்னுடைய பதின்ம வயதில் கூட வரவில்லை. ஆனால் அந்த மனிதனின் வீச்சை பாருங்கள். நான் அதை ரசிக்கிறேன்.” என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்