'தமிழ் நாட்டிற்கே நன்றி சொல்ல வேண்டும்' தக் லைஃப் பட விழாவில் உருக்கமாக பேசிய கமல்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'தமிழ் நாட்டிற்கே நன்றி சொல்ல வேண்டும்' தக் லைஃப் பட விழாவில் உருக்கமாக பேசிய கமல்..

'தமிழ் நாட்டிற்கே நன்றி சொல்ல வேண்டும்' தக் லைஃப் பட விழாவில் உருக்கமாக பேசிய கமல்..

Malavica Natarajan HT Tamil
Published Jun 04, 2025 06:34 PM IST

தான் எதிர்கொண்டு வரும் சர்ச்சைக்கு மத்தியில் தனக்கு ஆதவாக இருந்த தமிழ்நாட்டிற்கே நன்றி சொல்வதாக கமல் ஹாசன் கூறியுள்ளார்.

'தமிழ் நாட்டிற்கே நன்றி சொல்ல வேண்டும்' தக் லைஃப் பட விழாவில் உருக்கமாக பேசிய கமல்..
'தமிழ் நாட்டிற்கே நன்றி சொல்ல வேண்டும்' தக் லைஃப் பட விழாவில் உருக்கமாக பேசிய கமல்..

தமிழ்நாட்டிற்கே நன்றி

ஜூன் 5 ஆம் தேதி வெளியாக உள்ள 'தக் லைஃப்' படத்திற்காக, "என்னை ஆதரித்த தமிழ் நாட்டிற்கே நான் நன்றி சொல்ல வேண்டும்" என்றும் அவர் கூறினார். கன்னட மொழியின் தோற்றம் குறித்த அவரது கருத்தக்குப் பிறகு ஏற்பட்ட சர்ச்சையின் பின்னணியில் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

அர்த்தம் முழுமையானது

நான் மேடையில் பேசும் போது பயன்படுத்தும் "உயிரே, உறவே, தமிழே," என்ற தனது வார்த்தையின் பொருளை தான் முழுமையாக உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த மூன்று சொற்களும் சேர்ந்து தமிழ் மொழி மீதான ஆழ்ந்த அன்பையும், அதனுடான தனது ஆழமான பிணைப்பையும் வெளிப்படுத்துகிறது.

தக் லைஃப் குழுவினருக்கு பாராட்டு

உலகநாயகன் கமல்ஹாசன், "தக் லைஃப் படக்குழுவில் அனுபவம் வாய்ந்த பலர் உழைத்துள்ளனர். இந்தப் படத்தில் சர்வதேச கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றியுள்ளனர். நம் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அவர்களுடன் சிறப்பாகப் பணியாற்றி பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.

இயக்குநர் மணிரத்னம் செய்த வேலைக்காக என்னைப் பலர் பாராட்டுகிறார்கள். இது மணிரத்னம் படம், அதில் நடித்தது எனக்கு பெருமை. இளம் மணிரத்னம் இப்போது அனுபவம் வாய்ந்த இயக்குநராக மாறிவிட்டார். படத்தின் டிரைலர் மணிரத்னம் மற்றும் அதில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுநர்களால் பெரும் வெற்றியடைந்துள்ளது.

சினிமா வெற்றி பெற வேண்டும்

மருதுநாயகத்தை முடிக்க முடியாமல் போனதும், அந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனுடன் பணியாற்ற முடியாமல் போனதும் எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தக் லைஃப் மூலம் அந்த ஆசை நிறைவேறியுள்ளது. படம் வணிக ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்பது நல்லதுதான், ஆனால் அதைவிட முக்கியமாக சினிமா வெற்றி பெற வேண்டும். அது எனக்கு முக்கியம்.” என்று கூறினார்.

சம்பளம் இரண்டாம்பட்சம்

“படப்பிடிப்பு இடைவேளையில் மணி மற்றும் நான் மற்றவர்களும் எப்போதும் சினிமா பற்றிப் பேசுவோம். சினிமா எங்களுக்கு அனைவருக்கும் ஒரு ஆர்வம். சிறிய வேடங்களுக்காகக் கூட பலர் இந்தப் படத்தில் பணியாற்ற வந்தனர், ஏனெனில் அவர்கள் மணிரத்னத்துடன் பணியாற்ற விரும்பினர். அவர்களின் சம்பளம் எல்லாம் இரண்டாம் பட்சம். எங்களை ஆதரித்த தமிழ் மக்களின் ஆதரவை உணர்கிறேன். என்னை ஆதரித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி,” என்று அவர் மேலும் கூறினார்.