கமல் ரஜினி என வந்து இறங்கிய பிரபலங்கள்! களைக்கட்டிய ஐசரி கணேசன் இல்ல திருமண விழா!
திரைப்பட தயாரிப்பாளரான ஐசரி கணேசனின் மகள் திருமணம் இன்று சென்னையில் பிரம்மண்டமாக நடைபெற்றது. இதற்கு ரஜினி, கமல் உட்பட தமிழ் சினிமாவின் பல பெரிய நடிக்கர்களும் கலந்து கொண்டனர். மேலும் சில அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.

திரைப்பட தயாரிப்பாளரும் வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி & அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (விஸ்டாஸ்) நிறுவனருமான , ஐசரி கே கணேஷின் மகள் பிரீத்தா கணேஷுக்கும், லுஷ்வின் குமாருக்கும் சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு, மணமக்களை மகிழ்ச்சியுடன் ஆசீர்வதித்து, பரிசுகளை வழங்கினர்.
ப்ரீத்தாவின் இசை நிகழ்ச்சியில் சூர்யா
இதற்கு முன்னதாக நேற்று வியாழக்கிழமை மாலை பிரீத்தா -லுஷ்வின் ஜோடியின் சங்கீத் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. அதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். திருமணத்திற்கு முந்தைய நிகழ்வின் ஒரு வீடியோவில், சமீபத்தில் வெளியான ரெட்ரோ படத்திலிருந்து கனிமாவுக்கு திருமண விருந்தினர்கள் நடனமாடி இருந்தார்கள். மேலும் திருமண நிகழ்விற்கும் பல அரசியல் பிரபலங்கள் உட்பட கோலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.