சிம்புவை சுத்தி சுத்தி வரும் துயரம்.. ஆப்பு வைத்த கமல்.. அவதாரம் எடுக்கும் சிம்பு.. என்னதான் நடக்கிறது?
நடிகர் சிம்புவின் 48வது படத்தை தயாரிக்க உள்ளதாக கமல் ஹாசன் அறவித்திருந்த நிலையில், தற்போது அறவிப்பை வாபஸ் பெற்று படத்திலிருந்து விலகி உள்ளார்.

நடிகர் சிலம்பரசன் மாநாடு, வெந்துத் தணிந்தது காடு, பத்து தல படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்தது.
வரவேற்பு பெற்ற படத்தை கைவிட்ட கமல்
இதையடுத்து சிம்பு இரட்டை வேடத்தில் நடித்து வரும் இப்படத்தின் வேலைகள் மும்மரமாக நடந்த நிலையில்,படத்தின் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின், படப்பிடிப்பு தொடங்க மிகுந்த தாமதம் ஆனதால், சிம்பு, கமல் ஹாசனின் தக் ஃலைப் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்திருப்பார்.
இந்நிலையில், தற்போது ராஜ் கமல் பிலிம்ஸ் சிம்புவின் 48வது படத்தை தயாரிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. முன்னதாக, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாக உள்ள நிலையில், திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டு சிம்பு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் கமல்.