தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kamal Haasan: கருப்பன் குசும்புக்காரன்.. “ தீபிகா உங்க குழந்தை அந்த தொழில்தான் செய்யும்” - ஜோசியராக மாறிய கமல்ஹாசன்!

Kamal Haasan: கருப்பன் குசும்புக்காரன்.. “ தீபிகா உங்க குழந்தை அந்த தொழில்தான் செய்யும்” - ஜோசியராக மாறிய கமல்ஹாசன்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 24, 2024 05:29 PM IST

Kamal Haasan: அதனை இடை மறித்த கமல்ஹாசன்… (தீபிகா படுகோன் வயிற்றில் இருக்கும் குழந்தையை சுட்டிக்காட்டி).. அதுதான், இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறது. - கமல்ஹாசன்!

Kamal Haasan: கருப்பன் குசும்புக்காரன்.. “ தீபிகா உங்க குழந்தை அந்த தொழில்தான்” - ஜோசியராக மாறிய கமல்ஹாசன்!
Kamal Haasan: கருப்பன் குசும்புக்காரன்.. “ தீபிகா உங்க குழந்தை அந்த தொழில்தான்” - ஜோசியராக மாறிய கமல்ஹாசன்!

Kamal Haasan: தீபிகா படுகோன் வயிற்றில் வளரும் குழந்தை, வரும் காலத்தில் என்ன செய்யும், எதில் ஈடுபடும் என்பதை, அந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கமல்ஹாசன் கணித்திருக்கிறார். கல்கி திரைப்படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படக்குழு புரமோஷன் தொடர்பான பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. 

அந்த வகையில், அண்மையில் படக்குழு சார்ந்த கலைஞர்கள் கல்கி திரைப்படம் குறித்து உரையாடினர். அந்த உரையாடலில் கலந்து கொண்ட தீபிகா படுகோன் “ நான் அப்போது மும்பையில் இருந்தேன். பல்வேறு படப்பிடிப்புகளில் நான் பங்கேற்ற காரணத்தால், அது ஒரு நீண்ட இடைவெளியாக இருந்தது. அப்போது நாகியிடம் இருந்து மிஸ்டு கால் ஒன்று வந்திருந்தது.

அந்த அழைப்பை பார்த்ததும் அவர் என்ன சொல்லப்போகிறார் என்பது குறித்து ஆவலாக இருந்தேன். இதனையடுத்து, அவரை திரும்ப அழைத்து என்ன விஷயம் என்று கேட்கும் போது, நம்முடைய முதல் நாளில் கமல்ஹாசனுடனான காட்சியை எடுக்கப்போகிறோம் என்று ஒரு குழந்தை போல ஆர்ப்பரிப்போடு சொன்னார். ” என்றார்.

இடைமறித்த கமல்

இந்த நிலையில், அதனை இடை மறித்த கமல்ஹாசன்… (தீபிகா படுகோன் வயிற்றில் இருக்கும் குழந்தையை சுட்டிக்காட்டி).. அதுதான், இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறது. அந்த குழந்தைதான். வரும் காலத்தில் அந்த குழந்தையும், திரைப்படம் எடுக்கும் என்று நம்புவோம்” என்றார். இதைக்கேட்ட தீபிகா மற்றும் படக்குழுவினர் சிரித்தனர். 

ட்ரெண்டிங் செய்திகள்

ரன்வீர் சிங்-தீபிகா படுகோனின் கர்ப்பச் செய்தி  

தீபிகா மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் கடந்த பிப்ரவரி 29, 2024 அன்று தாங்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். தான் கர்ப்பமாக இருந்த போதும், தொடர்ந்து படங்களிலும், விளம்பரங்களிலும் தீபிகா நடித்து வருகிறார். கல்கி திரைப்படத்திலும் தீபிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். 

படம் குறித்து? 

இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் கல்கி 2898 AD. பிரபாஸ் முன்னணி கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்கி இருக்கும் இந்தப்படத்தை வைஜேந்தி மூவிஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து இருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

அந்த ட்ரெயிலரில் இடம் பெற்று இருந்த சில கிராஃபிக்ஸ் காட்சிகள் ஸ்டார் ட்ரெக் படத்திற்காக, தான் செய்த வேலைகளில் இருந்து திருடப்பட்டு இருப்பது வருத்தம் அளிப்பதாக இருப்பதாக ஹாலிவுட் கான்செப்ட் ஆர்ட்டிஸ்ட் ஆலிவர் பெக் குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருந்த பதிவும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அவர் இந்தியன் எக்ஸ் பிரஸ் இணையதளத்திற்கு பேசி இருக்கிறார்.

என்னுடைய வேலையின் குறிப்புகள் இருக்கின்றன

அதில் அவர் பேசும் போது, “ கல்கி படக்குழு முதலில் என்னை அந்தப்படத்தில் பணியாற்ற அழைப்பு விடுத்து இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. கடந்த ஜூன் 10ம் தேதி படத்தின் ட்ரெயிலர் வெளியானது. ட்ரெயிலரை நான் பார்த்த போது அதிர்ச்சிக்குள்ளானேன். நீங்கள் ஒரு கலைஞராக இல்லாத பட்சத்தில், ட்ரெயிலரை பார்க்கும் போது, அதனை கண்டுபிடிக்க கஷ்டமாக இருக்கலாம். நான் என்னுடைய சக கலைஞர்கள் மற்றும் நண்பர்களிடம் இது குறித்து கேட்டேன்.

அவர்கள் அது என்னுடைய படைப்பின் குறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். குறிப்பாக கலர் பேலட்டுகள் மற்றும் வளைவு வடிவங்களில் என்னுடைய வேலையின் குறிப்புகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். நிச்சயம், இது அப்பட்டமான காப்பி கிடையாது என்றாலும், என்னுடைய வேலையின் குறிப்புகள் அங்கு இருக்கின்றன.

அப்பட்டமான காப்பி இல்லை

என்னுடைய வேலையின் குறிப்புகளும், ட்ரெயிலரில் இடம் பெற்று இருப்பவையும் கிட்டத்தட்ட ஒற்றுமையாக இருக்கின்றன. இதற்கான காரணம், அவர்கள் என்னுடைய வேலை பார்க்க முயற்சித்து, என்னுடைய முந்தைய படங்களின் வேலை குறிப்புகளை பார்த்திருப்பதே. அதனால்தான் இவ்வளவு ஒற்றுமை இருக்கிறது. இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வதும் மிகவும் சிக்கலானது. காரணம் அங்கு என்னுடைய வேலை குறிப்புகளை அப்பட்டமாக காப்பி அடிக்கப்படவில்லை.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: