Kamal Haasan: ‘தோனிய அப்படி கூப்பிடுறதுதான் சரியா இருக்கும்; டிக்சனரி புரட்டி புதுபெயர் கொடுத்த கமல்!-இது நல்லா இருக்கே!
Kamal Haasan: நான் பட்டோடி நவாப், நாரி காண்ட்ராக்டர், ஜெய்சிம்ஹா ஆகியோரின் காலங்களைப் பற்றி பேசுகிறேன். அவர்கள் அனைவரும் உயர்தட்டு மக்கள் ஆவர் - புதுபெயர் கொடுத்த கமல்

Kamal Haasan: பல ஆண்டுகளாக தோனியின் ரசிகராக இருந்து வரும் நடிகர் கமல்ஹாசன், மீண்டும் தோனியை பாராட்டி பேசி இருக்கிறார். நடிகர் கமல் தன்னுடைய நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தை விளம்பரப்படுத்த, ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸில் சேனலில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அதில் அவர் தோனியை பற்றி பேசும் போது, தோனியை விவரிக்க கமல் equipoise ( சமநிலை) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.
தொடர்ந்து தோனியை பற்றி பேசிய கமல், "அவரது நட்சத்திர அந்தஸ்தை மறந்து விடுங்கள். அந்த மனிதரின் அசாத்திய முயற்சியை பாருங்கள்.அவர் எங்கே தொடங்கினார். ஒரு இளம் கல்லூரி இளைஞன், கிரிக்கெட் வீரராக மாறிய வழக்கமான கதை அல்ல அது.
நான் பட்டோடி நவாப், நாரி காண்ட்ராக்டர், ஜெய்சிம்ஹா ஆகியோரின் காலங்களைப் பற்றி பேசுகிறேன். அவர்கள் அனைவரும் உயர்தட்டு மக்கள் ஆவர். அப்போது உள்ளூர் கிரிக்கெட் உச்சத்தில் இருந்த நேரத்தில், எங்கோ ஒரு சிறிய கிராமத்தில் இருந்து இந்த தோனி வந்தார். இதற்கும் அவர் தன்னுடைய பதின்ம வயதில் கூட வரவில்லை. ஆனால் அந்த மனிதனின் வீச்சை பாருங்கள். நான் அதை ரசிக்கிறேன்.” என்றார்.
தோனியை "சமநிலை" என்று வர்ணித்த கமல்
மேலும் பேசிய கமல்ஹாசன், “எனது அகராதியில் நான் தொடர்ந்து பயன்படுத்தும் ஒரு வார்த்தை உள்ளது. அதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம். நான் அதை ஒரு வகையில் அதிகமாக பயன்படுத்துகிறேன். ஏனென்றால் நான் அதை மிகவும் விரும்புகிறேன். இது எனக்கு ஒரு வார்த்தை மட்டுமல்ல. இது ஒரு அணுகுமுறை. அது equipoise (சமநிலை) என்று அழைக்கப்படுகிறது.
தோனி எந்த நேரத்திலும், அவரது சமநிலையை இழக்கமாட்டார். விளையாட்டில் நிலவும் எந்த அழுத்தமும் அவரை சென்றடையாது.” என்று பேசினார். மேலும், “நான் அதை பாராட்டுகிறேன், ஏனென்றால் அவர் எது நடந்தாலும் அவர் தன்னுடைய செயலின் மூலமாக பேசுகிறார். ஷங்கர், ஆக்ஷன் என்று சொல்லும் போது எனக்குள் அதுதான் நடக்கிறது. காரணம், எப்போதும் இன்னொரு மேட்ச், இன்னொரு ஓவர் இருக்கிறது. ஆனால், அழுத்தம் உங்களை அணுக விடக்கூடாது. இது உங்களுக்காக மட்டுமல்ல; மொத்த அணிக்காகவும்தான். அதனால்தான் நான் அவரை ரசிக்கிறேன்.” என்று பேசினார்.
முன்பும் கமல் தோனியை புகழ்ந்தார்
முன்னதாக, கடந்த 2020 ம் ஆண்டு தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்த போது, அவரை பாராட்டி கமல் தன்னுடைய எக்ஸ் தளத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில் அவர், “ அன்புள்ள தோனி. தன்னம்பிக்கை விளையாட்டிலும், வாழ்க்கையிலும் சாதிக்க உதவும் என்பதை நிரூபித்ததற்கு நன்றி.
ஒரு சிறிய நகரத்திலிருந்து தேசத்தின் ஹீரோவாக உயர்ந்து இருக்கிறீர்கள். உங்களது திட்டமிடப்பட்ட பரிசார்த்த முயற்சிகள் மற்றும் அமைதியான நடத்தையை இந்திய அணி நிச்சயம் மிஸ் செய்யும். சென்னையுடனான உங்கள் காதல் கதை தொடர்வதில் மகிழ்ச்சி" என்று அதில் அவர் பதிவிட்டு இருந்தார்.
முன்னதாக, கடந்த 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன் . இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் - கமல் கூட்டணி எடுக்க முடிவு செய்த நிலையில், இந்தப்படத்தின் தயாரிப்பாளராக லைகா சுபாஷ்கரன் கமிட் ஆனார்.
ஆனால் படப்பிடிப்பில் நடந்த விபத்து, கொரோனா ஊரடங்கு, ஷங்கர் - தயாரிப்பாளர் இடையே நடந்த மோதல் ஆகியவை இந்தப்படத்தை தாமதப்படுத்தியது. அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சினையில் தலையிட, இருதரப்பும் சமாதானம் ஆகி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்தப்படத்தில் நடிகை காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் சமுத்திரக்கனி, ரோபா ஷங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோக்கள் வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில், ஜீன் மாதம் இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்