தக் லைஃப் படத்திற்கு முட்டுக்கட்டைப்போடும் கர்நாடகா.. நீதிமன்றம் நாடிய கமல்ஹாசன்! - மனுவில் குறிப்பிட்டது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தக் லைஃப் படத்திற்கு முட்டுக்கட்டைப்போடும் கர்நாடகா.. நீதிமன்றம் நாடிய கமல்ஹாசன்! - மனுவில் குறிப்பிட்டது என்ன?

தக் லைஃப் படத்திற்கு முட்டுக்கட்டைப்போடும் கர்நாடகா.. நீதிமன்றம் நாடிய கமல்ஹாசன்! - மனுவில் குறிப்பிட்டது என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 02, 2025 04:13 PM IST

தக் லைஃப் படத்திற்கான தடையை நீக்கக்கோரி கமல்ஹாசன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.

தக் லைஃப் படத்திற்கு முட்டுக்கட்டைப்போடும் கர்நாடகா.. நீதிமன்றம் நாடிய கமல்ஹாசன்! - மனுவில் குறிப்பிட்டது என்ன?
தக் லைஃப் படத்திற்கு முட்டுக்கட்டைப்போடும் கர்நாடகா.. நீதிமன்றம் நாடிய கமல்ஹாசன்! - மனுவில் குறிப்பிட்டது என்ன?

தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாக அதிகாரி வழியாக இந்த மனுவை தாக்கல் செய்திருக்கும் கமல்ஹாசன், அந்த மனுவில் கர்நாடக மாநில அரசு, காவல் துறை மற்றும் திரைப்பட வர்த்தக அமைப்புகள் தக் லைஃப் படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் திரையிடலுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

சென்னையில் நடந்த தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் ‘கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது" என்று கூறினார். இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கர்நாடகாவில் கமலுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டன. தக் லைஃப் பேனர்கள் கிழிக்கப்பட்டன. கமலின் புகைப்படம் எரிக்கப்பட்டன.

கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (கே.எஃப்.சி.சி) கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பு உட்பட பல அமைப்புகள் கமல்ஹாசனை மன்னிப்புக்கேட்க கோரியது. ஆனால், கமல்ஹாசன் மன்னிப்புகேட்க மறுத்து, அரசியல் வாதிகள் மொழிப்பிரச்சினையில் தலையிட வேண்டாம். அன்பு ஒரு போது மன்னிப்புக் கேட்காது என்றார். அதனைதொடர்ந்து கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

அண்மையில், சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் இந்த விவகாரம் குறித்து பேசும் போதும் அவர் மன்னிப்புக்கேட்க மறுத்து விட்டார். ‘ இது ஜனநாயகம். நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன். கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் மீது நான் வைத்திருக்கும் பாசம் உண்மையானது; நல்லெண்ணம் கொண்ட யாரும் அதை சந்தேகிக்க மாட்டார்கள். நான் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இல்லையென்றால் மாட்டேன் என்றார் கமல்ஹாசன்.

கடந்த காலங்களில் இதேபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு இருக்கிறேன். ஆனால் அரசியல் அழுத்தம் அல்லது உணர்ச்சி ரீதியான வற்புறுத்தலுக்கு அடிபணிய மாட்டேன் என்று கூறினார்.