Kamal Haasan : கமல் திடீர் முடிவு.. பிக் பாஸ் வரவிருக்கும் சீசனில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.. காரணம் என்ன தெரியுமா?
Kamal Haasan : முந்தைய சினிமா கமிட்மென்ட் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழக்கினார். இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து வந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கமாட்டேன் என்று கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 8ல் இருந்து விலகும் கமல்
சினிமாவில் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருப்பதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அன்பான பார்வையாளர்களே,
7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். முந்தைய சினிமா கமிட்மென்ட் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை.
உற்சாகமான மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவே அடிப்படை
உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்குப் பொழிந்திருக்கிறீர்கள், அதற்காக உங்களுக்கு என் என்றென்றும் நன்றி இருக்கிறது. பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக மாற்றுவதற்கு போட்டியாளர்களின் உங்கள் உற்சாகமான மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவே அடிப்படை.
தனிப்பட்ட முறையில், உங்கள் புரவலராக இருப்பது ஒரு வளமான சங்கமாக இருந்து வருகிறது, அங்கு நான் எனது கற்றலை நேர்மையாக பகிர்ந்து கொண்டேன். இந்த கற்றல் அனுபவத்திற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். நாங்கள் ஒன்றாக நேரம் செலவழித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடைசியாக, விஜய் டிவியின் அற்புதமான குழுவிற்கும், இந்த நிறுவனத்தை மாபெரும் வெற்றியடையச் செய்வதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீசன் இன்னொரு வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதுதான் காரணமா?
நடிகர் கமல்ஹாசன், ‘நாயகன்' படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம், ‘தக் லைஃப்'. த்ரிஷா, சிம்பு, அபிராமி, அசோக் செல்வன், இந்தி நடிகர் அலிஃபஸல், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்த தக் லைஃப் படம் ஏற்கனவே பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தேர்தல் பிரச்சாரங்களில் கமல் பிஸியாக இருந்ததே இந்த தாமதத்திற்கு காரணம் என சொல்லப்பட்டது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியால் தக் லைஃப் படப்பிடிப்பு பாதிக்கக்கூடாது என்று கமல் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்