அமரன் படம் பார்த்துட்டு கமல் சார் பல இடங்களில் கண் கலங்கினார் - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சொன்ன தகவல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அமரன் படம் பார்த்துட்டு கமல் சார் பல இடங்களில் கண் கலங்கினார் - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சொன்ன தகவல்

அமரன் படம் பார்த்துட்டு கமல் சார் பல இடங்களில் கண் கலங்கினார் - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சொன்ன தகவல்

Marimuthu M HT Tamil
Nov 06, 2024 12:08 PM IST

அமரன் படம் பார்த்துட்டு கமல் சார் பல இடங்களில் கண் கலங்கினார் என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

அமரன் படம் பார்த்துட்டு கமல் சார் பல இடங்களில் கண் கலங்கினார் - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சொன்ன தகவல்
அமரன் படம் பார்த்துட்டு கமல் சார் பல இடங்களில் கண் கலங்கினார் - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சொன்ன தகவல்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளியன்று அக்டோபர் 31ஆம் தேதி வெளியான திரைப்படம், அமரன். இப்படம் இந்தியா முழுவதும் நல்ல பெயரைப் பெற்றது.

இந்தப் படத்தை, கமல்ஹாசன், ஆர்.மகேந்திரன், சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் ஆகியோருடன் இணைந்து தயாரித்து இருக்கிறார். இந்தப்படத்தை தமிழில் ரெட் ஜெயன்ட் மூவிஸும், தெலுங்கில் ஷ்ரேஷ்த் மூவிஸ் பிரமாண்டமாக வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி செய்தியாளர் சந்திப்பில் இப்படத்தின் சிறப்பம்சங்களை பகிர்ந்து கொண்டார். அதன் தொகுப்பு இங்கே:

'அமரன்' படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது பற்றி?:

பதில் - ‘’தனித்துவமாக அமரனுக்கு பிளாக்பஸ்டர் வரவேற்பு கிடைத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படத்தை இவ்வளவு ஆதரித்த ரசிகர்களுக்கு மிக்க நன்றி. ரசிகர்கள் ஒரு நல்ல படத்தைப் பெரிதும் பாராட்டுவார்கள். 'அமரன்' படத்தின் மூலம் அது மீண்டும் நிரூபணமாகியுள்ளது''.

‘கமல்ஹாசன் என்ன மாதிரியான ஆதரவை அளித்தார்?’

பதில் - "கமல்ஹாசன் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். இந்தப் படத்திற்கு ஆரம்பம் முதல் இறுதி வரை நிறைய ஆதரவு கொடுத்திருக்கிறார். அவர் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்துள்ளார்.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு கமல்ஹாசனிடம் படத்தைக் காட்டினேன். அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். பல இடங்களில் அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அவர் இந்தக் கதையை பெண் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்ததாகக் கூறினார். "குடும்பம் மற்றும் எமோஷனல் அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார். அவரது பாராட்டை நான் என்றும் மறக்க மாட்டேன்’’.

’சிவகார்த்திகேயன், சாய் பல்லவி கதாபாத்திரங்கள் பற்றி?’

பதில்: ‘’இந்தக் கதையை எழுதும் போது, இந்துவின் கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். உண்மையான இந்து மேடத்தை சந்தித்த பிறகு, சாய் பல்லவி கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். ஏனெனில் இது நிறைய உண்மையும் உணர்ச்சியும் கொண்ட ஒரு கதாப்பாத்திரம்.

இந்தக் கதையை எழுதும்போது ஹீரோ யார் என்றே எனக்குத் தெரியாது. சிவகார்த்திகேயனிடம் கதைச் சொன்னேன். கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் மிகவும் கனெக்ட் ஆகியிருந்தார். இதற்கு முன் இதுபோன்ற படங்களில் அவர் நடித்ததில்லை. அமரன் அளவுக்கு முழு நீள ஆக்ஷன் ரோலில் அவர் முன் நடித்திருக்கவில்லை. அதனால்தான் படம் அவ்வளவு புதுமையாக இருந்தது. கதையைக் கேட்டவுடனேயே இந்தப் புராஜெக்டில் நடிப்பதாகச் சொன்னார். பிறகு கமல் சாரை சந்தித்தோம். அதன்பின் தான், திட்டம் டேக் ஆஃப் ஆனது’’.

’’இந்த படத்தை இயக்கும்போது உங்களுக்கு சவாலாக இருந்த விஷயங்கள் என்ன?’

பதில் - ’இது ஒரு உண்மைக் கதை. இந்தக் கதையின் ஆரம்பமும் முடிவும் எல்லோருக்கும் தெரியும். அத்தகைய கதையைப் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் சொல்வது, யதார்த்தத்தையும் புனைவையும் சமநிலைப்படுத்துவது, அசல் சம்பவத்தை மீண்டும் உருவாக்குவது ஒரு சவாலாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. ஆனால், நான் அதை ஒரு பொறுப்பாக எடுத்துக்கொண்டேன். யதார்த்தம் உள்ள படங்களை நான் மிகவும் ரசிக்கிறேன்.

ஆக்ஷன் காட்சிகள், காஷ்மீரில் படமாக்கப்பட்ட காட்சிகள் என அனைத்துமே சவாலானவை. நான் ஒவ்வொரு சண்டை பகுதியையும் தெளிவாக எழுதியிருந்தேன். ஒவ்வொரு ஷாட்டையும் காகிதத்தில் திட்டமிட்டிருந்தேன். அவை அனைத்தையும் திரையில் அடைவது மிகவும் சவாலானது’.

’ஜிவி பிரகாஷின் இசை பற்றி?’

பதில் - ’ஜிவி பிரகாஷ் இந்த படத்தின் தூண். அவர் நிறைய புதிய இசையை கொடுத்துள்ளார். ஆத்மார்த்தமான இசையை உருவாக்கியுள்ளார். அத்தகைய இசையமைப்பாளருடன் பணிபுரிவது எனது அதிர்ஷ்டம்’.

’தயாரிப்பாளர்களின் ஆதரவு?’

பதில் - ’கமல்ஹாசன், ஆர்.மகேந்திரன் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஆகியோரின் ஆதரவுடன் தான் இப்படம் இவ்வளவு பிரமாண்டமாக வந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’.

’படம் பார்த்த பிறகு இந்து ரெபேக்கா வர்கீஸ் எப்படி உணர்ந்தார்?’

பதில் - ‘இந்துவுக்கு அமரன் படம் மிகவும் பிடித்திருந்தது. சென்னையில் முதல் நாள் முதல் ஷோ பார்த்த போது மிகவும் எமோஷனலாக இருந்தார்’.

’உங்கள் அடுத்த ப்ராஜெக்ட் என்ன?’

பதில்- ‘இப்போது நிறைய விவாதங்கள் நடக்கின்றன, விரைவில் சொல்கிறேன்’ என்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.