8 ம் வகுப்பு படிப்பு.. 250 கோடிக்கு மேலே சொத்து.. 49 கோடி கடன்! - கமலின் சொத்து விபரங்கள் இவ்வளவா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  8 ம் வகுப்பு படிப்பு.. 250 கோடிக்கு மேலே சொத்து.. 49 கோடி கடன்! - கமலின் சொத்து விபரங்கள் இவ்வளவா?

8 ம் வகுப்பு படிப்பு.. 250 கோடிக்கு மேலே சொத்து.. 49 கோடி கடன்! - கமலின் சொத்து விபரங்கள் இவ்வளவா?

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 07, 2025 12:27 PM IST

அவர் சமர்பித்திருக்கும் சொத்து மதிப்பில், 2023 - 24 நிதியாண்டில் ரூ.78.90 கோடி வருமானம் ஈட்டியதாக குறிப்பிட்டு இருக்கும் அவர், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.60 கோடியும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.245.86 கோடியும் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்

8 ம் வகுப்பு படிப்பு.. 250 கோடிக்கு மேலே சொத்து.. 49 கோடி கடன்! - கமலின் சொத்து விபரங்கள் இவ்வளவா?
8 ம் வகுப்பு படிப்பு.. 250 கோடிக்கு மேலே சொத்து.. 49 கோடி கடன்! - கமலின் சொத்து விபரங்கள் இவ்வளவா?

கமல் போட்டியிடுகிறார்

இந்தத் தேர்தலில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட உள்ளார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் நேற்று தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து விபரங்கள், கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் கொடுத்திருக்கிறார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ள விவரங்களை இங்கே பார்க்கலாம்.

கல்வி தகுதி:

அதில், சென்னை புரசைவாக்கம் சர் எம் சிடி. முத்தையா செட்டியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கும் கமல்ஹாசன் அவரது தொழிலை நடிப்பு என குறிப்பிட்டு இருக்கிறார்.

அவர் சமர்பித்திருக்கும் சொத்து மதிப்பில், 2023 - 24 நிதியாண்டில் ரூ.78.90 கோடி வருமானம் ஈட்டியதாக குறிப்பிட்டு இருக்கும் அவர், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.60 கோடியும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.245.86 கோடியும் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அதில் தனக்கு 49.67 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

வணிககட்டிடங்கள்

சென்னை ஆழ்வார்பேட்டை, உத்தண்டி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நான்கு வணிககட்டிடங்கள் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கும் அவர் அதன் சொத்து மதிப்பு ரூ.111.1 கோடி இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், திண்டுக்கல் வில்பட்டியில் இருக்கும் விவசாய நிலத்தின் மதிப்பு ரூ.22.24 கோடி என்றும் கையில் ரொக்கமாக ரூ.2.60 லட்சம் இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் தன்னிடம் மகேந்திரா பொலிரோ, பென்ஸ், பிஎம்டபிள்யூ, லக்சஸ் ஆகிய கார்கள் இருப்பதாகவும் இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். அதில் அவர் தோல்வியடைந்தார். அப்போது அவர் மனுவில் தாக்கல் செய்த விபரங்கள் இங்கே!

2019 - 20 நிதியாண்டில் அவரது வருமானம் ரூ.22.1 கோடி என்று குறிப்பிட்டு இருந்த அவர், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.45.09 கோடி எனவும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.131.84 கோடி எனவும் குறிப்பிட்டு இருந்தார்.