‘சினிமாவின் மீது சந்தேகம் வரும் போதெல்லாம்.. உங்களின் கதைகள் தொடரட்டும்’ - மணிரத்னத்திற்கு கமல் வாழ்த்து!
‘நாயகன் முதல் தக் லைஃப் வரை குடும்பம், கனவு காண்பவர்கள் என்பதையும் தாண்டி சினிமாவின் மாணவர்களாக ஒன்றாக பயணித்திருக்கிறோம். - கமல்ஹாசன் வாழ்த்து!

‘சினிமாவின் மீது சந்தேகம் வரும் போதெல்லாம்.. உங்களின் கதைகள் தொடரட்டும்’ - மணிரத்னத்திற்கு கமல் வாழ்த்து!
இயக்குநர் மணிரத்னம் இன்று தன்னுடைய 69 வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கமல்ஹாசன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ‘நாயகன் முதல் தக் லைஃப் வரை குடும்பம், கனவு காண்பவர்கள் என்பதையும் தாண்டி சினிமாவின் மாணவர்களாக ஒன்றாக பயணித்திருக்கிறோம்.
உங்கள் துணை எனக்கு பலம் கொடுத்திருக்கிறது. உங்களின் கதைகள் தொடரட்டும். சினிமாவின் மீது எனக்கு சந்தேகம் வரும் போதெல்லாம் நான் திரும்பி பார்க்கும் வெகுசில நபர்களில் நீங்களும் ஒருவர். உங்களின் ஒவ்வொரு ஃபேரமும் அழகையும், சினிமாவுக்கான அர்த்தத்தையும் கொடுக்கட்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் மணிரத்னம்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.