ஆஸ்கர் தேர்வு குழு: கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானாவுக்கு அழைப்பு! - வேறு யாரெல்லாம் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஆஸ்கர் தேர்வு குழு: கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானாவுக்கு அழைப்பு! - வேறு யாரெல்லாம் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்?

ஆஸ்கர் தேர்வு குழு: கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானாவுக்கு அழைப்பு! - வேறு யாரெல்லாம் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்?

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 27, 2025 10:42 AM IST

கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா, அரியானா கிராண்டே உள்ளிட்ட 534 பேர் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பில் சேர அழைக்கப்பட்டனர்.

ஆஸ்கர் தேர்வு குழு: கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானாவுக்கு அழைப்பு! - வேறு யாரெல்லாம் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்?
ஆஸ்கர் தேர்வு குழு: கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானாவுக்கு அழைப்பு! - வேறு யாரெல்லாம் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்?

மொத்தம் 534 பேர்

மோஷன் பிக்சர் அகாடமியில் சேர அழைக்கப்பட்ட இவர்களுடன் அரியானா கிராண்டே, பிராண்டி கார்லைல், ஆண்ட்ரூ வாட், ப்ரான்போர்ட் மார்சலிஸ், கோனன் ஓ பிரையன் மற்றும் ஜிம்மி கிம்மல் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

சர்வதேச அளவில் டேவ் பாடிஸ்டா, ஜேசன் மோமோவா, ஆப்ரி பிளாசா, டேனியல் டெட்வைலர் மற்றும் ஆண்ட்ரூ ஸ்காட் போன்ற பல நட்சத்திரங்கள் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு இருக்கின்றனர்.

கூடவே, கில்லியன் ஆண்டர்சன், நவோமி அக்கி, மோனிகா பார்பரோ, ஜோடி கோமர், வாரிசு நட்சத்திரங்கள் கீரன் கல்கின் மற்றும் ஜெர்மி ஸ்ட்ராங், ஆஸ்கர் விருது வென்ற மைக்கி மேடிசன், அட்ரியானா பாஸ் (எமிலியா பெரெஸ்) மற்றும் செபாஸ்டியன் ஸ்டான் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.

வருகிற ஜூன் 26 அன்று அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் அமைப்பில் சேர அழைக்கப்பட்ட 534 நபர்களில் இடம் பெற்றிருக்கும் பிரபலங்களின் பெயர்கள் தற்போது கவனம் பெற்று வருகிறது.

மொத்த எண்ணிக்கை விபரம்

இந்த அழைப்பாளர்கள் அனைவரும் உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் போது அகாடமியில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை (எமரிடஸ் உட்பட) 11,120 ஆகவும், வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10,143 ஆகவும் இருக்கும்.

அகாடமியின் 19 கிளைகள் மற்றும் ஒரு உறுப்பினர் வகைக்கான சேர்க்கை முறையானது விண்ணப்பம் கொடுத்து சேரும் முறையல்லாமல் ஸ்பான்சர்ஷிப் மூலம் சேர்க்கப்படுகிறது.

அசோசியேட்ஸ் தவிர, மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும், தாங்கள் சேர விரும்பும் கிளை அல்லது பிரிவைச் சேர்ந்த அகாடமி உறுப்பினர்கள் இருவரால் ஸ்பான்சர்ஷிப் செய்யப்பட வேண்டும்.

உறுப்பினர் தேர்வு செயல்முறை, தொழில்முறை தகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. அதே நேரத்தில் அனைவருக்கும் பிரதிநிதித்துவம், உள்ளடக்கம் மற்றும் சமத்துவத்தை வளர்ப்பதற்கான அகாடமியின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்துகிறது.

சதவீத அடிப்படையிலான விபரங்கள்

2025 அழைக்கப்பட்ட குழுவில், 41% பெண்கள், 45% பிரதிநிதித்துவப்படுத்தப்படாத சமூகங்களைச் சேர்ந்தவர்கள், மற்றும் 55% அமெரிக்காவிற்கு வெளியே உள்ள 60 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

அழைப்புகளை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே 2025 -ல் அகாடமியின் உறுப்பினர் சேர்க்கையில் சேர்க்கப்படுவார்கள். ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 15, 2026 அன்று நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 12-ம் தேதி தொடங்கி ஜனவரி 16-ம் தேதி வரை நடைபெறும். பரிந்துரைகள் ஜனவரி 22 அன்று அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 10 ஆம் தேதி வருடாந்திர ஆஸ்கர் பரிந்துரைந்துரைப்பட்டவர்களுக்கான மதிய உணவு வழங்கப்படும். கோனன் ஓ பிரையன் ஆஸ்கர் விருதுகளை தொகுத்து வழங்க உள்ளார்.