‘கமல்ஹாசன், சிம்பு நடித்த தக் லைஃப் இசை வெளியீட்டுவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு’ - காரணம் ஏன்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘கமல்ஹாசன், சிம்பு நடித்த தக் லைஃப் இசை வெளியீட்டுவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு’ - காரணம் ஏன்?

‘கமல்ஹாசன், சிம்பு நடித்த தக் லைஃப் இசை வெளியீட்டுவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு’ - காரணம் ஏன்?

Marimuthu M HT Tamil Published May 09, 2025 02:43 PM IST
Marimuthu M HT Tamil
Published May 09, 2025 02:43 PM IST

பல கட்டப் படப்பிடிப்புகள் முடிந்து ‘’தக் லைஃப்'' திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸாகிறது. மேலும் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

‘கமல்ஹாசன், சிம்பு நடித்த தக் லைஃப் இசை வெளியீட்டுவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு’ - காரணம் ஏன்?
‘கமல்ஹாசன், சிம்பு நடித்த தக் லைஃப் இசை வெளியீட்டுவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு’ - காரணம் ஏன்?

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம், தக் லைஃப். நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டப் பலர் நடித்துவருகின்றனர். ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தை மணிரத்னம் எழுதி இயக்கியுள்ளார்.

'தக் லைஃப்’ படத்தின்மூலம் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி மீண்டும் ஒன்றுசேர்ந்துள்ளது, உலக அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில், மும்பையில் கோலோச்சிய தாதா தமிழர் வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, 1987ஆம் ஆண்டு கமல்ஹாசனை வைத்து மணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ திரைப்படம் உலகளவில் கல்ட் ஃபிலிமாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், டைம் வார இதழ் மற்றும் சிஎன்என் மற்றும் ஐபிஎன் நிறுவனம், குறிப்பிட்ட உலகின் நூறு சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக, ‘நாயகன்’ படம் உள்ளது. இதனால், கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் மீண்டும் இணைந்து உருவாகிவரும் ‘தக் லைஃப்’ படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு உலகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பல கட்டப் படப்பிடிப்புகள் முடிந்து ‘’தக் லைஃப்'' திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸாகிறது. மேலும் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் 'தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் வரும் மே 16ஆம் தேதி, நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எல்லையில் நிலவி வரும் போர்ப் பதற்றம் காரணமாக ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டுவிழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

டைட்டில் வீடியோ ஏற்படுத்திய எதிர்பார்ப்பு:

'தக் லைஃப்’ படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவில், ஒரு வறண்ட மற்றும் புழுதி நிரம்பிய நிலத்தில் ஒருவர் நிற்கிறார். அவர் தன்னை ஒரு கிராமிய உடையில் மூடியிருக்கிறார். அவர் மீது தாக்குதல் நடத்தத் தயாராக ஐந்து பேர் தூரத்தில் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியபடி நிற்கிறார்கள். அடர்த்தியான மீசை மற்றும் தாடியுடன் அவரின் முகத்தைக் கேமரா காட்டுகிறது.

ஐந்து பேர் சேர்ந்து அவரை அடிக்க நெருங்கியதும், அவர் தனது முகத்தை மூடியிருந்த துணியை நீக்கி, ஒரு தற்காப்புக் கலை நிலையில் சண்டையிடத் தயாராகிறார். பின்னர், தன்னைத் தாக்க நினைப்பவர்களையும் கீழே விழ வைக்கிறார். அதன்பின் அவர் மீண்டும் தனது மேலங்கியை அணிந்து கேமராவைப் பார்த்து புன்னகைக்கிறார். அப்போது ‘’என்பேர் ரங்கராய சக்திவேல் நாயக்கன்'' எனச் சொல்கிறார். மேலும் அவர் தன்னை கிரிமினல் எனப் பிறர் சொல்வதாகக் கூறுகிறார். படத்தின் பெயர் 'தக் லைஃப்' என்று வெளியிடப்படுகிறது.

‘’தக் லைஃப்'' படத்தில் சிம்பு:

தக் லைஃப் படமானது சென்னை, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, புதுடெல்லி, ஜெய்சல்மர், செர்பியா போன்றப் பல்வேறு பகுதிகளில் நடந்தது.

இப்படத்தின் சூட்டிங்கிற்காக சிம்பு, ராஜஸ்தானின் ஜெய்சல்மர் பகுதியில் நடிக்கும்போது, அவரது படங்கள் வைரல் ஆகின. மேலும் தக் லைஃப் படத்துக்காக, சிம்பு நீண்ட முடி வளர்த்து இருக்கிறார். இப்படத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்குப் பின், சிம்புவின் ஜோடியாக திரிஷா நடிப்பதாகக் கூறப்படுகிறது.

தக் லைஃப் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி டேக்லைனை வெளியிட்டுள்ள படக்குழு, 'ஒரு விதி; அதற்கு என்று வரம்புகள் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளது.

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.
Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.