தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Kamal Haasan And Jayachitra Starrer Cinema Paithiyam Completed 49 Years Of Its Release

49 Years of Cinema Paithiyam: சினிமாவின் போலித்தனத்தையும், நிஜ வாழ்க்கை எதார்த்தத்தையும் நடிகர்களை வைத்தே சொன்ன படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 31, 2024 05:00 AM IST

முன்னணி நடிகர்கள் பலரும் ஒரே படத்தில் தோன்றியது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாகவே அமைந்தது. எதிர்பார்ப்பின்றி வெளியாகி சூப்பர் ஹிட்டானது ஆனது சினிமா பைத்தியம்.

சினிமா பைத்தியம் படத்தில் கமல்ஹாசன் - ஜெயசித்ரா
சினிமா பைத்தியம் படத்தில் கமல்ஹாசன் - ஜெயசித்ரா

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழில் ஜெயா பச்சன் வேடத்தில் ஜெயசித்ரா பள்ளிக்கு செல்லும் மாணவியாக நடித்திருப்பார். ஜெயசித்ராவை காதலிக்கும் வேடத்தில் கமல்ஹாசன் வருவார். ஜெய்சங்கர் நடிகராகவே நடித்திருப்பார். இவர் மட்டுமல்ல சிவாஜி கணேசன், ஜெயலலிதா, நடிகை சகுந்தலா, இயக்குநர்கள் பீம் சிங், பி. மாதவன், சி.வி. ராஜேந்தரன், நடிகர் கே. பாலாஜி, செந்தாமரை உள்ளிட்டோரும் அவர்களவே நடித்திருப்பார்கள்.

சினிமா பார்ப்பதில் தீராத ஆர்வம் கொண்டிருக்கும் ஜெயசித்ரா, ஹீரோவாக வரும் ஜெய்சங்கர் மீது தீவிர பற்று உள்ளவராக இருப்பார். அவர் செய்வது அனைத்தும் நிஜம் என நம்புவதோடு, அவரை நிஜ ஹீரோவாகவே பார்த்து வருவார். இந்த சூழ்நிலையில் ஜெயசித்ராவிடம் காதலை வெளிப்படுத்து உறவினரான கமல் காதலுக்கு மறுப்பு தெரிவிப்பதோடு, ஜெய்சங்ரை மணக்க விரும்புவதாக தெரிவிப்பார்.

அப்போதுதான் சினிமா மீதான மோகத்தால் பைத்தியம் போல் மாறியிருக்கும் ஜெய்சித்ராவை மேற்படி இருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள் உதவியால் சினிமாவில் இருக்கும் போலித்தனத்தையும், நிஜ வாழ்க்கை எதார்த்தத்தையும் வீட்டில் இருப்பவர்கள் புரிய வைப்பார்கள். இறுதியில் தன்னை காதலிக்கும் கமலை கரம் பிடிப்பதோடு படம் நிறைவடையும். படத்தின் கதையானது ஜெய்சங்கரை மையப்படுத்தியே நகரும் விதமாக இருக்கும். 

இந்த படம் வெளியான காலகட்டத்தில் சினிமா என்பது முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி பார்க்கும் விஷயமாக சினிமா அமைந்திருந்தது. இந்த படத்தில் வரும் ஜெயசித்ராவின் கதாபாத்திரத்தை போல் நிஜ வாழ்க்கையிலும் ஏராளமானோர் சினிமாவில் நடப்பது அத்தனையும் நிஜம் என்றே அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தனர். சினிமாவை சினிமாவாக பார்க்காத நபர்களுக்கான பாடமாக இந்த படம் அமைந்திருந்தது.

இந்த படத்துக்கு ஏ.எல். பிரகாசம் திரைக்கதை எழுத, முக்தா சீனிவாசன் இயக்கியிருந்தார். எதார்த்தமும், சினிமாவுக்கு உரிய செட்டப்புடன் அமைந்திருந்த படத்தின் திரைக்கதை காமெடி, எமோஷனல், செண்டிமெண்ட், காதல் என அனைத்து விதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

படத்தில் ஜெயசித்ரா, கமல்ஹாசன் நடிப்பு வெகுவாக பேசப்படும் விதமாக இருந்தது. கண்ணதாசன் பாடல் வரிகளில் படத்தில் இடம்பிடித்த என் உள்ளம் அழகானா, நான் அறியாத, ஐ வில் செல் மை பியூட்டி என அனைத்து பாடல்களும் அந்த காலகட்டத்தில் சூப்பர் ஹிட்டாகின.

பிரபல நட்சத்திரங்கள் ஒரே படத்தில் கேமியோ கதாபாத்திரங்களில் தோன்றியது சர்ப்ரைஸ் அளிக்கும் விஷயமாகவே இருந்தது. கலர் படங்கள் வருகைக்கு பின்னரும் பிளாக் அண்ட ஒயிட் படமாக வெளியாகி 100 நாள்களுக்கு மேல் ஓடி சூப்பர் ஹிட்டான சினிமா பைத்தியம் வெளியாகி இன்றுடன் 49 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.