விடாமுயற்சி ட்ரோல்.. படம் மட்டும் ஹிட் ஆச்சுன்னா இதையெல்லாம் ஒரு பய; - மகிழ் திருமேனிக்கு அஜித் அட்வைஸ் என்ன தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விடாமுயற்சி ட்ரோல்.. படம் மட்டும் ஹிட் ஆச்சுன்னா இதையெல்லாம் ஒரு பய; - மகிழ் திருமேனிக்கு அஜித் அட்வைஸ் என்ன தெரியுமா?

விடாமுயற்சி ட்ரோல்.. படம் மட்டும் ஹிட் ஆச்சுன்னா இதையெல்லாம் ஒரு பய; - மகிழ் திருமேனிக்கு அஜித் அட்வைஸ் என்ன தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 02, 2025 05:21 PM IST

படம் மட்டும் ஹிட் அடித்து விட்டால், இதையெல்லாம் பற்றியெல்லாம் யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள்; ரசிகர்கள் உன்னை பாராட்டுவார்கள் - மகிழ் திருமேனிக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்

விடாமுயற்சி ட்ரோல்.. படம் மட்டும் ஹிட் ஆச்சுன்னா இதையெல்லாம் ஒரு பய; - மகிழ் திருமேனிக்கு அஜித் அட்வைஸ் தெரியுமா?
விடாமுயற்சி ட்ரோல்.. படம் மட்டும் ஹிட் ஆச்சுன்னா இதையெல்லாம் ஒரு பய; - மகிழ் திருமேனிக்கு அஜித் அட்வைஸ் தெரியுமா?

குறிப்பாக மகிழ் திருமேனிக்கும், அஜித்திற்கும் இடையேயான சண்டை, தயாரிப்பு நிறுவனத்தின் பணநெருக்கடி உள்ளிட்ட காரணங்களினாலே படம் தாமதமாகிறது உள்ளிட்ட செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறன. இந்த நிலையில், இது குறித்து அஜித், மகிழ்திருமேனியிடம் கூறியதை டான்ஸ் மாஸ்டர் கல்யாண் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

படம் மட்டும் ஹிட் ஆனால்?

இது குறித்து அவர் பேசும் போது, ‘ மகிழ் திருமேனிக்கும், அஜித்திற்கும் இடையே சண்டை; அதனால்தான் படம் தாமதம் ஆகிறது உள்ளிட்ட வதந்திகளுக்கு அஜித் மகிழ்திருமேனியிடம் அஜித் ஒரு விஷயம் சொன்னார். அது என்னவென்றால், படம் மட்டும் ஹிட் அடித்து விட்டால், இதையெல்லாம் பற்றியெல்லாம் யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள்; ரசிகர்கள் உன்னை பாராட்டுவார்கள்; ஆகையால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், நீ உன்னுடைய வேலையை மட்டும் சிறப்பாக செய். படத்தை முடித்து மக்களிடம் கொடு; அதன் பின்னர் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்று கூறியிருக்கிறார்.’ என்று பேசினார்.

அஜித் உடல்எடை குறைத்தது குறித்து பேசும் போது, ‘ அவர் முன்பிருந்தே உடம்பை குறைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்; இந்த நிலையில் திடீரென்று அவரை ஒல்லியாக பார்த்தவுடன் எனக்கு ஷாக் ஆகிவிட்டது. அப்படியே பில்லாவில் பார்த்த அஜித் போல இருந்தார்.

நான் அவரிடம் இதை இப்படியே கொண்டு செல்லுங்கள் சரியாக இருக்கும்; பார்ப்பதற்கு அழகாக இருக்கிறீர்கள் என்று கூறினேன். அதற்கு அவர், கண்டிப்பாக செய்ய வேண்டும்…. செய்ய வேண்டும் என்று சொன்னார். அவர் கடுமையாக உழைக்கிறார்.

ஒரு பக்கம் ரேஸ், இன்னொரு பக்கம் ஃபேமிலி, மற்றொரு பக்கம் படப்பிடிப்பு என பிசியாக ஓடிக்கொண்டிருக்கிறார்; எனக்குத் தெரிந்து அவர் தினமும் 3 - 4 மணி நேரம்தான் தூங்குகிறார். திரிஷாவும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தார். அவர்கள் இரண்டு பேரையும் கிரீடம், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் பார்த்தது போலவே இருந்தது. அவர்களது கெமிஸ்ட்ரியும் நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது.

வரிசை கட்டிய படங்கள்

விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகாது என அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கல் விடுமுறையை குறிவைத்து அடுத்தடுத்து புதிய படங்கள் களமிறங்குகின்றன. இதில் பெரிய ஹீரோக்கள் படங்கள் இல்லை என்றாலும், ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை, இயக்குநர் பாலாவின் வணங்கான் படமும் அடங்கியுள்ளது.

பொங்கல் ரேஸில் இருந்து விடாமுயற்சி விலகல் அறிவிப்புக்கு பின்னர் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் ஜெயம் ரவி - நித்யா மேனன் நடித்திருக்கும் ரொமாண்டிக் படமான காதலிக்க நேரமில்லை ஜனவரி 14 வெளியாகும் என அறிவக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பாலா இயக்கத்தில் உருவாகி அருண் விஜய் நடித்து பல முறை தள்ளிப்போன வணங்கான் படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் உலா வருகின்றன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை.

இந்த படம் தவிர சிபிராஜ் நடித்திருக்கும் டென் ஹவர், மறைந்த கேப்டன் விஜயகாந்த் இளையமகன் சண்முக பாண்டியன் நடித்திருக்கும் படைத்தலவன், மிர்ச்சி சிவா நடித்திருக்கும் சுமோ, தருணம், மெட்ராஸ்காரன் உள்ளிட்ட படங்கள் பொங்கல் ரிலீஸாக வெளியாகலாம் என பேசப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.