Kalki 2899 AD: பாக்ஸ் ஆபிஸ் கில்லி டா.. 4 நாளில் வசூலில் அடித்து நொறுக்கிய கல்கி 2898 கி.பி!
Kalki 2899 AD: நாக் அஸ்வினின் கல்கி 2898 கி.பி தொடக்க நாளில் ரூ .95.3 கோடியை ஈட்டியது. இது நான்காவது நாளில் ரூ .85 கோடி வசூல் செய்து உள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் கில்லி டா.. 4 நாளில் வசூலில் அடித்து நொறுக்கிய கல்கி 2898 கி.பி
Kalki 2899 AD: இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கிய கல்கி 2898 AD ஜூன் 27 ஆம் தேதி வெளியிடப்பட்டது. பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல் ஹாசன் நடிப்பில் வெளியான கல்கி 2898 AD படம் இந்தியாவில் ரூ.302.4 கோடி வசூல் செய்து உள்ளது.
கல்கி 2898 ஏடி பாக்ஸ் ஆபிஸ் வசூல்
sacnilk. com போர்ட்டலின் படி, கல்கி 2898 ஏடி அதன் தொடக்க நாளில் 95.3 கோடி ரூபாயும், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் வெள்ளிக்கிழமை 57. 6 கோடி ரூபாயும் நிகரமாக ஈட்டியது.
சனிக்கிழமை 64. 5 கோடி ரூபாயும், ஞாயிற்றுக்கிழமை 85 கோடி ரூபாயும் வசூல் செய்து உள்ளது. இது இந்தியாவில் படத்தின் மொத்த நிகர ரூ .302. 4 கோடி ரூபாய்யை எடுத்துச் செல்கிறது.