Kalki 2898 AD Review : ஹாலிவுட் தரத்திலான விசுவல்கள்; பாதிப்பை ஏற்படுத்தும் 2ம் பாதி ; எப்படியிருக்கிறது கல்கி படம்!
Kalki 2898 AD Review : ஹாலிவுட் தரத்திலான விசுவல்கள் மற்றும் காமெடியாக பிரபாஸ் பாதிப்பை ஏற்படுத்தும் 2ம் பாதி என கல்கி படம் கலக்கலாக உள்ளதாக முதல் பார்வை விமர்சனங்கள் கூறுகின்றன.
படத்தின் முதல் பாதியில் பிரபாஸ்க்கு குறைவான காட்சிகளே இருந்தாலும், இரண்டாவது பாதியில் திரை முழுவதும் விரவிக்கிடந்து தெறிக்கவிடுகிறார். அமிதாப்பச்சன், கமலஹாசன் மறறும் தீபிகா படுகோனேவின் காட்சிகள் முதல் பாதியை கலக்குகின்றன.
சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட இடைவேளை இரண்டாம் பாதிக்கு சிறந்த எதிர்ப்பார்பை ஏற்படுத்துகிறது. பின்னணி இசை தேவையான இடங்களில் சிறப்பான பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. ஹாலிவுட் தரத்திலான விசுவல்கள் சிறப்பாக இருப்பதால் கட்டாயம் திரையரங்கில் சென்று பார்க்கவேண்டிய படம்.
இரண்டாம் பாதி விமர்சனம்
முதல் பாதியுடன் ஒப்பிடும்போது, இரண்டாம் பாதி நல்ல பாதிப்பை ஏற்படுத்துகிறது. கிளைமேக்ஸ் எனப்படும் உச்சகட்ட காட்சிகள் இந்திய சினமாவிலே சிறப்பாக எடுக்கப்பட்டதாக உள்ளது. நாக் அஸ்வின் பிரபாசின் கதாபாத்திரத்தை சிறப்பாக எடுத்துக்கொள்கிறார். கல்கி சினிமேட்டிக் யுனிவர்ஸ்க்கு ஒரு சிறப்பான துவக்கம்.
இரண்டாம் பாதியில் முக்கிய கதாப்பாத்திரங்களின் நடிப்பு மொத்தமுமே சிறப்பாக உள்ளது. விஜய் தேவரகொண்டா மற்றும் துல்கர் சல்மானின் காட்சிகளும் அற்புதம்.
உலக ரசிகர்களுக்கு இந்தியாவில் இருந்து விருந்தளிக்கச் சென்றுள்ள திரைப்படம்தான் கல்கி. கதை மகாபாரத காவியத்தில் இருந்து வேரூன்றுகிறது. பரபரப்பான காட்சிகள் இங்கும் அங்கும் இருந்தாலும், இந்தியாவின் சிறந்த காவிய படங்களுக்கு கல்கி ஒரு நல்ல துவக்கமாக இருக்கும்.
இது கல்கி திரைப்படத்தை முதலில் பார்த்தவர்கள் கொடுத்த விமர்சனம் என்றாலும் இந்தப்படம் எப்படியானது?
நாக் அஸ்வினின் கல்கி கி.பி 2898 அறிவியல் புனைகதை மற்றும் புராணங்களை இணைக்கும் ஒரு டிஸ்டோபியன் திரைப்படம். ராணா டகுபதி கூறியதுபோல, இது இந்தியாவின் 'அவெஞ்சர்ஸ் தருணம்'. கமல், பிரபாஸ், தீபிகா படுகோனே, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஜூன் 27 அன்று திரையரங்குகளில் இதைப் பார்ப்பதற்கு முன்பு, படத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
கல்கி கிபி 2898 திரைப்படம், எதிர்காலத்தில் கங்கை வறண்டு, காசி மக்கள் அத்யாவசிய தேவைகளுக்காக கஷ்டப்படுவதுபோல் காட்டப்பட்டுள்ளது. மக்கள் சுவாசிக்க ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பயன்படுத்துகிறார்கள்.
கல்கி படத்தின் கதாபாத்திரங்கள்
பிரபாஸ் ஒரு வேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் இந்தப்படத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தின் பெயர் பைரவா. இவருடன் புஜ்ஜி என்ற ஏஐயும் உள்ளது. அதற்கு கீர்த்தி சுரேஷ் டப்பிங் கொடுத்துள்ளார். கமல் ஒரு துறவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தீபிகா படுகேனே சுமதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமிதாப்பச்சன் அஸ்வதாமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
புஜ்ஜி, சென்னை மஹிந்திரா ஆராய்ச்சி மையம் மற்றும் கோவை ஜெயம் ஆட்டோமோட்வ்ஸ் சேர்ந்து உருவாக்கியது.
நான் அஸ்வின் கூறுகையில் இந்தப்படம் மகாபாரத யுகத்தில் துவங்கி கல்கி யுகத்தில் முடிவதாக தெரிவித்தார். அதனால் தான் இந்தப்படத்துக்கு கல்கி கி.பி 2898 என்று பெயரிடப்பட்டுள்ளது. 6,000 ஆண்டுகள் இந்தப்படம் நடக்கிறது.
டாபிக்ஸ்