‘இன்செப்சன் ட்ரெய்லர் கொடுத்த மனச்சோர்வு.. உண்மை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை’ -கல்கி டைரக்டர் பேட்டி!
அகாடமி விருது வென்ற இன்செப்ஷன் உலகை வியப்பில் ஆழ்த்துவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, இயக்குனர் நாக் அஸ்வின் படைப்புகளில் இதேபோன்ற கதையைக் கொண்டிருந்தார்; இதோ தேநீர்

பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்ற திரைப்படம் கல்கி 2898 AD. இந்தப்படத்தை இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கி இருந்தார். படத்தில் கதையாக சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லையென்றாலும், கிராஃபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை மிரள வைத்திருந்தன.
இவர் அண்மையில் ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கிருந்த மாணவர்கள் அவருடன் உரையாடினர். அப்போது நாக் அஸ்வின் கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்சன் படம் குறித்து பேசினார்.
இன்செப்சன் கொடுத்த மனச்சோர்வு
அதில் அவர் பேசும் போது, ‘ 2008 -ல் இன்செப்சன் போன்ற ஒரு கதையை எழுதினேன். நோலன் படம் கனவுகளைப் பற்றியது என்றால், என்னுடையது நினைவுகளைப் பற்றியது. உண்மையில், இன்செப்ஷனின் டிரெய்லரைப் பார்த்து கிட்டத்தட்ட ஒரு வாரம் நான் மனச்சோர்வில் இருந்தேன். அதை மனச்சோர்வின் வாரம் என்றழைத்த அஸ்வின், அது வாய்ப்பை மிஸ் செய்தது பற்றியதல்ல.. கலை இணையான பாதைகளில் எப்படி செல்கிறது என்பதின் பிரதிபலிப்பு என்றார்.
மேலும் பேசிய அவர், அதுதான் நான் அதிலிருந்து எடுத்துக்கொண்டதாகும். உண்மையாக நேர்மையாகச் சொல்கிறேன், உண்மையானது உங்களின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆகையால், அதனை நீங்கள் துரத்துவதை நிறுத்தி, முடிந்தவரை உங்கள் படைப்பில் நம்பகத்தன்மையை கொண்டு வாருங்கள்’ என்று பேசினார்.
கல்கி இரண்டாம் பாகம் பற்றி பேசிய அவர், ‘கல்கியை ஒரு ஜிக்-ஜாக் புதிர் முறையில் விரிவுபடுத்தி அதைத் தீர்க்க விரும்பினால், ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் மாதங்கள் மற்றும் வருடக்கணக்கான முயற்சி மற்றும் திட்டமிடல் தேவை. எழுத்துதான் மையக்கரு, அதனால்தான் முதல் பாகம் மிகவும் சிறப்பாக செயல்பட்டது.’ என்று பேசினார்.
திரைப்படத் தயாரிப்பில் AI -ன் வளர்ச்சி பற்றி பேசிய அவர், "நாங்கள் கல்கியில் பணிபுரிந்தபோது, ஏற்கனவே சில AI கருவிகள் கிடைத்தன. ஆனால், இப்போது, இது முற்றிலும் மாறுபட்ட விளையாட்டாக மாறிவிட்டது. மக்கள் ஏற்கனவே AI உதவியுடன் டிரெய்லர்களை உருவாக்கி வருகின்றனர். ஆனால் விஷயம் என்னவென்றால் அதற்கு வழிகாட்ட இன்னும் ஒரு மனம் தேவை.’ என்று பேசினார்.
இன்செப்ஷன் கதை என்ன?
மக்களின் கனவுகளில் நுழைந்து, அவர்களின் ஆழ்மனதின் ஆழத்திலிருந்து அவர்களின் ரகசியங்களைத் திருடும் அரிய திறன் கொண்ட ஒரு திருடன். அவனது தனித்துவமான திறமை அவனை கார்ப்பரேட் உளவு உலகில் ஒரு மதிப்புமிக்க மனிதராக ஆக்குகிறது, ஆனால், அது அவர் விரும்பும் அனைத்தையும் இழக்கச் செய்கிறது.. அதன் பின்னர் என்ன ஆனது என்பது மீதிக்கதை!
கல்கி கதை என்ன?
குருசேத்திர போரில் அஸ்வத்தாமா உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை கொல்ல பிரம்மாஸ்திரத்தை ஏவுகிறான். இதனை கண்டு கொதித்த கிருஷ்ணர், அவனுக்கு சாகா வரத்தை அளித்து, அந்த குழந்தையாக தானே அவதரிப்பேன். அப்போது என்னை நீ காப்பாற்ற வேண்டும். அது வரை, இந்த பூமியில் நீ வேதனையோடு வாழ் என்று சாபம் கொடுத்து சென்று விடுகிறார்.
கல்கி அவதாரம் எங்கே தொடங்குகிறது?
படம் அப்படியே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான எதிர் காலத்திற்கு செல்லுகிறது. அங்கு சுப்ரீம் பெரிய காம்ப்ளக்சை நிறுவி, அதில் பல கர்ப்பிணி பெண்களை உருவாக்கி, அவர்களிடம் இருந்து சீரத்தை எடுத்து கொண்டு இருக்கிறார். அங்கு சுமதியும் மாட்டிக்கொண்டு இருக்கிறாள்.
ஒரு கட்டத்தில் அவள் தன்னுடைய குழந்தைக்காக அங்கிருந்து தப்பித்து, உலக மாற்ற விடுதலைக்காக காம்ப் ளக்சிற்கு எதிராக போராடிக்கொண்டு இருக்கும் ஷம்பாலா கும்பலிடம் தஞ்சம் அடைகிறாள். ஒரு கட்டத்தில் சுமதி வயிற்றில் இருக்கும் குழந்தைதான் அந்த கடவுள் என தெரிய வருகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பதே கல்கி படத்தின் கதை.

டாபிக்ஸ்