Kalki 2898 AD: இது நல்லா இருக்கே.. ரூ.1000 கோடி வசூலை நெருங்கும் கல்கி 2898 AD வசூல்!
Kalki 2898 AD: கல்கி 2898 AD படம் உலக அளவில் 845 கோடி ரூபாய்யை தாண்டி வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபாஸ் ஹீரோவாக நடித்து, இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான திரைப்படம் கல்கி 2898 AD. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் உலக அளவில் 845 கோடி ரூபாய்யை தாண்டி வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கல்கி 2898 AD இதுவரை ரூ. 845 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 33 கோடிக்கும் மேல் வசூல் செய்து உள்ளதாம் .
கல்கி படத்தின் கதை என்ன?
Kalki 2898 AD Review: குருசேத்திர போரில் அஸ்வத்தாமா உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை கொல்ல பிரம்மாஸ்திரத்தை ஏவுகிறான். இதனை கண்டு கொதித்த கிருஷ்ணர், அவனுக்கு சாகா வரத்தை அளித்து, அந்த குழந்தையாக தானே அவதரிப்பேன். அப்போது என்னை நீ காப்பாற்ற வேண்டும். அது வரை, இந்த பூமியில் நீ வேதனையோடு வாழ் என்று சாபம் கொடுத்து சென்று விடுகிறார்.