தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Kalidas Jayaram Starrer Nila Varum Velai A Period Supernatural Thriller On Grand Scale Shooting Starts At Palakkad

Kalidas Jayaram: தங்கமே.. தங்கமே.. சூப்பர் நேச்சுரல் திரில்லர்.. கமிட் ஆன காளிதாஸ்! - டைரக்டர் யாரு தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Feb 10, 2024 04:52 PM IST

‘நிலா வரும் வேளை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர்நேச்சுரல் த்ரில்லர், தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இருமொழிப் படமாக உருவாகிறது.

காளிதாஸ் ஜெயராம்!
காளிதாஸ் ஜெயராம்!

ட்ரெண்டிங் செய்திகள்

’லட்சுமி’, ’மாறா’ மற்றும் ’டிரிகர்’ போன்ற படங்களை தயாரித்து வழங்கிய மிராக்கிள் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது. 

‘நிலா வரும் வேளை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர்நேச்சுரல் த்ரில்லர், தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இருமொழிப் படமாக உருவாகிறது.

இந்தப்படத்தில், தமிழில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாகவும், தெலுங்கில் சத்யதேவ் காஞ்சரனா கதாநாயகனாகவும் நடிக்கின்றனர். இதற்கு முன்பு ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற ஃபீல் குட் ரொமாண்டிக் என்டர்டெய்னர் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்த ஹரி இந்தப் படத்தை இயக்குகிறார். தெலுங்கில் இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பா இந்தப் படம் குறித்து பகிர்ந்து கொண்டதாவது, “ இப்போது உருவாகி வரும் ‘நிலா வரும் வேளை’ திரைப்படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும். படத்திற்கான லொகேஷன், செட் வேலைகள்,  ஆக்‌ஷன் காட்சிகள் போன்றவை சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் திரைப்பட ஆர்வலர்களை வசீகரிக்கும். 

திரையில் வரும் நேரத்தைப் பொருட்படுத்தாமல் கதாபாத்திரத் தன்மை அறிந்து, நடிகர் காளிதாஸ் ஜெயராம் தரும் அர்ப்பணிப்பும், திறமையும் ஒவ்வொரு படத்திலும் தெளிவாகத் தெரிகிறது. 

மிராக்கிள் மூவிஸ் தயாரிக்கும் இந்த படம் மூலம் அவருடன் இணைவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இயக்குநர் ஹரியின் தொலைநோக்கு பார்வையும் நிபுணத்துவமும் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தும். ‘நிலா வரும் வேளை’ படம் தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும்” என்றார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.