Kajal Aggarwal: ‘டேய் டேய் எங்க கைவைக்கிற’.. தவறாக நடந்த ரசிகர்.. கொந்தளித்த காஜல் அகர்வால்!
இதையடுத்து அதிர்ச்சியடைந்த காஜல் என்ன இது என்று கேட்க.. உடனே அந்த ரசிகர் அங்கிருந்து அப்புறப்படுத்தபட்டார். இது தொடர்பான தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் ஹைதராபாத்தில் திறக்கப்பட்ட தனியார் கடை ஒன்றின் திறப்பு விழாவில் தன்னுடைய தந்தையுடன் கலந்து கொண்டார்.
என்ன நடந்தது
கடை திறப்பு விழாவின் போது, ரசிகர் ஒருவர் காஜலிடம் செல்ஃபி வேண்டும் என்று கேட்க, அதற்கு காஜல் அகர்வால் அனுமதி கொடுத்ததாக தெரிகிறது.
இதனையடுத்து காஜலின் அருகில் செல்போனை எடுத்து வந்த அந்த ரசிகர், தன்னுடைய தவறான அணுகுமுறையால் அவரை முகம் சுளிக்க வைத்தார்.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த காஜல் என்ன இது என்று கேட்க.. உடனே அந்த ரசிகர் அங்கிருந்து அப்புறப்படுத்தபட்டார். இது தொடர்பான தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டில் சாரா அலி கான், அபர்ணா பாலமுரளி, அஹானா குமார் ஆகியோர் ரசிகர்களின் தவறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வரவிருக்கும் படைப்பு
தொழிலதிபர் கெளதம் நீலை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன் பின்னர் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர் இந்தியன் 2 படத்தில் கமிட் ஆகி சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "நான் எப்போதும் சினிமாவின் மிகப்பெரிய ரசிகை. நான் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். நான் நடித்து இருக்கும் சத்யபாமா மற்றும் இந்தியன் 2 திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன.
இரண்டிலும் எனது பங்கு தனித்துவமானதாக இருக்கும்.நீங்கள் அனைவரும் அதைப் பார்க்க நான் காத்திருக்கிறேன். நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். தற்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.” என்று பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்