Kadhalikka Neramillai: மறக்க முடியுமா டி.எஸ். பாலையாவின் எவர் கிரீன் ஹிட் காதலிக்க நேரமில்லை!
இயக்குனர் ஸ்ரீதர் இயக்கி 1964 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இத்திரைப்படம் வெளிவந்தபோது மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. மிகவும் ஜாலியான ஒரு காதல் திரைப்படமாக இது அமைந்தது. இப்போதும் இத்திரைப்படம் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

டி.எஸ்.பாலையா, நாகேஷ், முத்துராமன் நடிப்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான காதலிக்க நேரமில்லை படம் வெளியாகி 60 ஆண்டுகள் கடந்துள்ளது. முழு நீள நகைச்சுவை படம். இந்த நாளில் அந்த படம் குறித்த சில தகவல்களை திருமபி பார்க்கலாம்.
இயக்குனர் ஸ்ரீதர் இயக்கி 1964 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இத்திரைப்படம் வெளிவந்தபோது மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. மிகவும் ஜாலியான ஒரு காதல் திரைப்படமாக இது அமைந்தது. இப்போதும் இத்திரைப்படம் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
நடிகர்கள்
இந்த படத்தில் ரவிசந்திரன், காஞ்சனா, ,டி. எஸ். பாலையா, முத்துராமன், நாகேஷ், சச்சு, வி. எஸ். ராகவன், ராஜஸ்ரீ உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கதை
பொள்ளாச்சி அருகே சின்னமலை ஏலக்காய் எஸ்டேட் என்ற பங்களாவில் வசிக்கும் விஸ்வநாதன், பண ஆசை கொண்ட எஸ்டேட் உரிமையாளர் அவரது மகன் செல்லப்பாவாக நாகேஷ் நடித்திருந்தார். செல்லப்பா, ஒரு திரைப்படம் தயாரிப்பதில் ஆர்வமாக இருப்பார். ஓகோ புரொடெக்சன்ஸ் என்ற பெயரில் ஒரு கம்பெனியை நடத்திவருவார். அவரது தந்தையின் எதிர்ப்பாளர், தந்தையின் ஆணவத்தின் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். விஸ்வநாதனுக்கு சென்னையில் படிக்கும் காஞ்சனா மற்றும் நிர்மலா என்ற இரு மகள்களும் உள்ளனர் . காஞ்சனா தனது கல்லூரி தோழன் வாசுவை காதலிக்கிறாள். சகோதரிகள் படிப்பை முடித்து வீடு திரும்புகிறார்கள். நிர்மலாவை வாசுவின் ஏழை நண்பனான வாசு காதலிப்பார்.
எஸ்டேட் மேலாளரின் மகள் மீனாலோச்சினியை தனது படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்கிறார் செல்லப்பா. தந்தையின் கம்பெனியில் பணியாற்றி வெளியேற்றப்பட்ட அசோக்கை செல்லப்பா படத்தின் திரைக்கதைக்கு தேர்ந்தெடுத்திருப்பார். அதற்கு நிதியளிக்க "சிதம்பரத்திடம்" கேட்கிறார். படம் எதிர்பார்த்தபடி முன்னேறாததால், மீனலோச்சினியின் தந்தை செல்லப்பாவை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார். செல்லப்பா ஆரம்பத்தில் மறுத்துவிட்டார், ஆனால் தனக்கு வேறு வழியில்லை என்பதை உணர்ந்து, அவர் வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் ஏழை நண்பனான அசோக்கின் காதல் நிறைவேற வேண்டும் என்ற நோக்கில் வாசு அசோக்கின் பணக்கார தந்தையாக நடிக்க வருவார். கடைசியாக இவர்களது குட்டு எப்படி வெளியானது. இவர்களது காதல் எப்படி கல்யாணத்தில் நிறைவடைந்தது என்பதுதான் படம்.
படத்தில் ஹீரோ ஹீரோயின்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி பாலையா படம் முழுவதும் நிறைந்திருந்தார்.
படத்தில் பாலையாவுக்கு நாகேஷ் தன் படத்தின் திரில்லர் சஸ்பென்ஸ் கதையை சொல்லுவார். அந்த சீன் படத்தின் ஹைலைட் காட்சி. இன்று பார்த்தாலும் அந்த நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். படத்தில் பாலையாவின் பேசாத இடங்களில் கூட அவரது உடல் மொழி மட்டுமே நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். நாகேஷ்ம் பாலையாவுக்கு போட்டியாக நம்மை சிரிக்க வைப்பார்.
படத்திற்கான 8 பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதி இருந்தார்.
என்ன பார்வை உந்தன் பார்வை பாடலில் அந்த கால மெரினா கடற்கரையும் பாடல் படமாக்கப்பட்ட விதமும் அட்டகாசமாக இருக்கும். பொன்னான கைகள் புண்ணாகலாமா பாடல், அனுபவம் புதுமை , காதலிக்க நேரமில்லை, விஸ்வநானதன் வேலை வேண்டும், நாளாம் நாளாம் திருநாளாம் என பாடல்கள் அநைத்து அற்புதமான பாடல்கள்.
ஆழியாறு, பொள்ளாச்சி, ஊட்டி ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் மட்டுமே படமாக்கப்பட்ட படம்.
காமெடி படத்தையும் லாஜிக்காக எடுத்த படம். படத்தின் வசனங்கள் அனைத்தும் இன்றும் நம்மை சிரிக்க வைக்கும்.

டாபிக்ஸ்