நிர்வாகம் தயாரா? பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கைகள் என்ன? - பதில்களை அடுக்கிய கே.என். நேரு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  நிர்வாகம் தயாரா? பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கைகள் என்ன? - பதில்களை அடுக்கிய கே.என். நேரு!

நிர்வாகம் தயாரா? பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கைகள் என்ன? - பதில்களை அடுக்கிய கே.என். நேரு!

HT Tamil HT Tamil Published Jun 04, 2025 05:41 PM IST
HT Tamil HT Tamil
Published Jun 04, 2025 05:41 PM IST

வரப்போகிற மழையை எதிர்கொள்ள நிர்வாகம் எல்லா வகையிலும் தயாராக இருக்கிறது. மழைநீர் வடிகால் பணி எல்லா இடங்களிலும் முடிந்து விட்டது. கொசஸ்தலை ஆற்றில் மட்டும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி முடிவதற்கு இன்னும் ஆறு மாத காலம் எடுக்கும்.

நிர்வாகம் தயாரா? பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கைகள் என்ன? - பதில்களை அடுக்கிய கே.என். நேரு!
நிர்வாகம் தயாரா? பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கைகள் என்ன? - பதில்களை அடுக்கிய கே.என். நேரு!

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கே.என். நேரு பேசியதாவது, ‘ விரைவில் பருவ மழை பொழிய இருக்கிறது. முதலமைச்சர் ஏற்கனவே இது தொடர்பாக அனைத்து அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களை அழைத்து, எல்லா இடங்களிலும் மழை வரப்போகிறது.

6 மாத காலம் எடுக்கும்

அதற்கான அடிப்படை வசதிகளை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்து விட்டார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக மெட்ரோ இருக்கும் இடங்களில் பிரச்சினைகள் இருப்பதை கவனித்து அதற்கு தனி கவனம் கொடுக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஆகையால், வரப்போகிற மழையை எதிர்கொள்ள நிர்வாகம் எல்லா வகையிலும் தயாராக இருக்கிறது. மழைநீர் வடிகால் பணி எல்லா இடங்களிலும் முடிந்து விட்டது. கொசஸ்தலை ஆற்றில் மட்டும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி முடிவதற்கு இன்னும் ஆறு மாத காலம் எடுக்கும்.

5000 சாலைகளுக்கு டெண்டர் விட்டிருக்கிறோம்.

சாலை பணிகளைப் பொறுத்தவரை 5000 சாலைகளுக்கு டெண்டர் விட்டிருக்கிறோம். எங்கெல்லாம் தண்ணீர் தேங்கி வருகிறதோ, அந்த சாலைகளை கான்கிரீட் சாலைகளாக மாற்றுவதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் 35 ஆயிரம் சாலைகள் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதில் 5000 சாலைகளை புதிதாக போடச் சொல்லி முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார். சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்’ என்று பேசினார்.

நிகழ்ச்சியில் நேரு
நிகழ்ச்சியில் நேரு

இந்நிகழ்ச்சியில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஜெ.கருணாநிதி (தியாகராயநகர்), திரு. த.வேலு (மயிலாப்பூர்), மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., மாமன்ற உறுப்பினர்கள் திரு. சு.பாஸ்கர், திரு. கே.ஏழுமலை, திருமதி ஆர்.ரத்னா லோகேஸ்வரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.