Jyotika: பாலிவுட் திரையுலகை விட்டு விலக காரணமாக அமைந்த சம்பவம்! 27 வருடத்துக்கு பின் கம்பேக் ஏன்? ஜோதிகா பதில்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jyotika: பாலிவுட் திரையுலகை விட்டு விலக காரணமாக அமைந்த சம்பவம்! 27 வருடத்துக்கு பின் கம்பேக் ஏன்? ஜோதிகா பதில்

Jyotika: பாலிவுட் திரையுலகை விட்டு விலக காரணமாக அமைந்த சம்பவம்! 27 வருடத்துக்கு பின் கம்பேக் ஏன்? ஜோதிகா பதில்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 10, 2024 10:59 AM IST

இந்தியில் டோலி சாஜா கே ரக்னா என்ற படத்தில் தான் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஜோதிகா. அதன் பின் 27 வருடத்துக்கு பின் கம்பேக் கொடுத்த அவர் தற்போது ஸ்ரீகாந்த் என்ற படத்தில் ராஜ்குமார் ராவ் உடன் இணைந்து நடிக்கிறார். பாலிவுட் திரையுலகை விட்டு விலக காரணமாக அமைந்த சம்பவம் குறித்து அவர் பதில் அளித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகை விட்டு விலக காரணமாக அமைந்த சம்பவம் குறித்து ஜோதிகா விளக்கம்
பாலிவுட் திரையுலகை விட்டு விலக காரணமாக அமைந்த சம்பவம் குறித்து ஜோதிகா விளக்கம்

முதன் முதலில் அக்‌ஷய் கண்ணா ஜோடியாக டோலி சாஜா கே ரக்னா என்ற படத்தில் தான் அறிமுகமானார் ஜோதிகா. அதன் பின்னர் தென்னிந்திய சினிமா பக்கம் ஒதுங்கிய அவர், அங்கு டாப் நடிகையாக வலம் வந்ததுடன், கோலிவுட் ஹீரோவாக சூர்யாவை திருமணம் செய்து தமிழ்நாட்டிலேயே செட்டிலானார்.

27 ஆண்டுகள் இந்தியில் நடிக்காதது ஏன்?

27 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட் திரையுலகுக்கு மீண்டும் கம்பேக் கொடுத்திருப்பது குறித்து ஜோதிகா கூறியதாவது: "இந்தி படங்களில் இருந்து எனக்கு ஒருமுறை கூட வாய்ப்பு வரவில்லை. நான் 27 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய படங்களில் நடித்தேன். அதன் பிறகு தென்னிந்திய படங்களில் மட்டுமே பணியாற்றினேன்.

என்னுடைய முதல் இந்திப் படம் திரையரங்குகளில் சரியாக ஓடவில்லை. அந்த படம் வழக்கமான இந்த பட பார்முலாவில் இருந்தது. . அடுத்தடுத்து வாய்ப்புகள் அமைய வேண்டுமானால் உங்களது முதல் படம் ஓட வேண்டும்.

நான் நடிக்க வந்தபோது, பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுக்கென சில ஹீரோயின்கள் தேர்வு செய்து அவர்களுக்கே தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்தார்கள். எனது படம் கூட ஒரு பெரிய பேனரால் தயாரிக்கப்பட்டது, ஆனால் விதியால் அது ஓடவில்லை. நல்ல வேளையாக அப்போது தென்னிந்திய படம் வாய்ப்பு கிடைக்க, அந்த படத்தில் ஒப்பந்தமாகி பாலிவுட்டில் இருந்து விலகிவிட்டேன்."

இந்தி படங்களை தவிர்க்கவில்லை

"நான் நடித்த இந்தி படம் பாக்ஸ் ஆபிஸில் கூட பெரிதாக வசூலிக்கவில்லை. ஆனால் அதில் எனது நடிப்பு வரவேற்பை பெற்றது. அதனால் எனக்கு நிறைய படங்களின் வாய்ப்புகள் கிடைத்தன.

பாலிவுட், கோலிவுட் என இரண்டு திரையுலகுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தன. பாலிவுட்டில் உள்ளவர்களும் நான் ஒரு தென்னிந்தியர் என்று நினைத்தார்கள். இனிமேல் இந்தி படங்களில் நடிக்கபோவதில்லை என முடிவு செய்தார்கள்.

தென்னிந்திய சினிமாக்களில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினேன். எனது திறமைக்கு உரிய உங்கீகாரமும் கிடைத்தது. இந்தி படத்தை நான் தவிர்த்தது இல்லை. இத்தனை வருடங்களாக எனக்கு ஏற்றவாறு ஸ்கிரிப்ட் எதுவும் வழங்கப்படவில்லை."

இவ்வாறு அவர் கூறினார்.

ஜோதிகா புதிய படங்கள்

ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் ஸ்ரீகாந்த் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ராஜ்குமார் ராவ், அலையா எஃப் மற்றும் ஷரத் கேல்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  

எக்செல் என்டர்டெயின்மென்ட்டின் புதிய படமான  டப்பா கார்ட்டலிலும் ஜோதிக நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஷபானா ஆஸ்மி மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Jyotika's upcoming projects

Jyotika's upcoming movie Srikanth is set to release on May 10. The film stars Rajkummar Rao, Alaya F, and Sharad Kelkar in important roles. Additionally, Jyotika will also be seen in Excel Entertainment's upcoming movie Dabba Cartel, which is co-produced by Farhan Akhtar and Ritesh Sidhwani. The movie is directed by Hitesh Shah and also features Shabana Azmi and Shalini Pandey in pivotal roles.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.