June Kollywood Updates: இந்தியன் 2 ட்ரெய்லர் முதல் தி கோட் அப்டேட் வரை.. ஜூன் மாதம் ரசிகர்களுக்கு விருந்து
June Kollywood Updates: இந்தியன் 2 ட்ரெய்லர் முதல் விஜய்யின் தி கோட் பட அப்டேட் வரை ஜூன் மாதம் வெளியாக இருக்கும் குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.

June Kollywood Updates: இந்தியன் 2 ட்ரெய்லர்
லஞ்சம் கொடுக்காத ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் சேனாதிபதி என்னும் கதாபாத்திரம் சந்திக்கும் பிரச்னைகளையும், சமூகத்தை மாற்ற முனையும் அக்கறையையும் கொண்டு 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், இந்தியன்.
மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த இப்படம், அப்போதே 30 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டித்தந்தது. பின்னர் இயக்குநர் ஷங்கரும், கமல்ஹாசனும் மீண்டும் இணையவே இல்லை. வெவ்வேறு படங்களிலும் வெவ்வேறு இயக்குநர்களுடன் பணியாற்றினர்.
அதன் தொடர்ச்சியான இந்தியன் 2 திரைப்படம் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கமல்ஹாசனை வைத்து மீண்டும் உருவாகிறது என அறிவிக்கப்பட்டது. அதன்பின், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி, சென்னை, ராஜமுந்திரி, போபால், குவாலியர் போன்ற பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்தது.
ஜூலை 12 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்படும். , மற்றும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி ( இன்று) நடக்கிறது. ஆடியோ வெளியீட்டைத் தொடர்ந்து, 'இந்தியன் 2' படத்தின் டிரெய்லர் வெளியிட தயாராகி வருகிறது.
தங்கலன் ரிலீஸ் தேதி
சீயான் விக்ரம் நடித்த 'தங்கலான்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் தயாரிப்பாளர்களால் லாக் செய்யப்படவில்லை, மேலும் ஜூன் முடிவதற்குள் அதை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'தங்கலான்' ரிலீஸ் தேதியைக் கேட்க ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
ராயன் ட்ரெய்லர்
தனுஷின் 50 ஆவது படமான 'ராயன்' ஜூன் 13 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'ராயன்' ட்ரெய்லர் பார்வையாளர்களைச் சென்றடைய இன்னும் சில நாட்களே உள்ளது. 'ராயன்' டிரெய்லர் தனுஷின் கேங்ஸ்டர் நாடகத்தின் தெளிவான ஓவியத்தையும் கொடுக்கும்.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்
விஜய் நடிக்கும், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் அவருக்கு மூன்று ரோல் இருக்கலாம் எனவும், மற்றொரு கதாபாத்திரத்தை சஸ்பென்ஸாக வைத்திருப்பார்கள் எனவும் பேச்சு அடிபட்டது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ம்ற்றும் டைட்டில் புத்தாண்டையொட்டி வெளியானது. அதன் படி, படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டு இருப்பதும், விஜய் இந்தப்படத்தில் இருவேறு கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் என்பதும் தெரியவந்தது. படத்தின் இரண்டாவது சிங்கிள் விஜய் பிறந்தநாளில் (ஜூன் 22) வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு பாடல் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்