Ajith: அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட் உண்மையா? - உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர்!
Ajith: ஜூன் மாதம் கடைசியில் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. வழக்கமாக வியாழக்கிழமையில் தான் அஜித்தின் பட அப்டேட், ரிலீஸ் வரும். ஆனால் இந்த முறை ஞாயிற்றுக்கிழமை வெளியானது.
மகிழ் திருமேனி எழுதி, இயக்கி அஜீத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சமீபத்திய ஆக்ஷன் என்டர்டெய்னர் விடாமுயற்சி . பல புகழ்பெற்ற நடிகர்கள் நடித்துள்ள இந்த திரைப்படம், உடல் இரட்டை இல்லாமல் அஜித் நடித்த துணிச்சலான ஸ்டண்ட் செய்து அசத்தி இருந்தார். அது தொடர்பான வீடியோ வெளியாகி சமீபத்தில் தலைப்புச் செய்திகளில் அடிபட்டது.
டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமை
படத்தின் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு பெரும் தொகைக்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். படத்தின் வெற்றிகரமான தியேட்டர் ரன் அல்லது ரிலீஸ் தேதியிலிருந்து ஐந்து வாரங்களுக்குப் பிறகு, அஜித்தின் விடா முயற்சி மேடையில் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கும்.
படக்குழுவினர்
இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், மற்றும் பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் வெற்றி பெற்ற ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு த்ரிஷாவும், அஜித்தும் இணைந்து நடிக்கின்றனர்.
அஜீத் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில், அஜித் நடித்த ஒரு துணிச்சலான கார் ஸ்டண்ட் இணையத்தில் வைரலாக பரவியது.
அவரது ரசிகர்கள் வெறித்தனமாக அதை ரசித்தார்கள். அஜித்தின் அர்ப்பணிப்புக்காக திரைப்பட ஆர்வலர்கள் பாராட்டினர்,
ஜூன் மாதம் கடைசியில் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. வழக்கமாக வியாழக்கிழமையில் தான் அஜித்தின் பட அப்டேட், ரிலீஸ் வரும். ஆனால் இந்த முறை ஞாயிற்றுக்கிழமை வெளியானது.
வி சென்டிமென்ட்
இதனால் பலரும் அஜித் எதனால் வி சென்டிமென்ட்டை கைவிட்டார். இதற்கு பின்னால் என்ன காரணம் என்ன கேட்க ஆரம்பித்தார்கள்.
இது தொடர்பாக பத்திரிக்கையாளர் வி.கே.சுந்தர் சமீபத்தில் Aadhan Cinema சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தார்.
அவர் கூறுகையில், ”அஜித் வி சென்டிமென்ட் முன்பு பார்த்து இருக்கலாம். ஆனால் இப்போது பார்ப்பது இல்லை. தற்செயலாக தான் நடக்கிறது. பெரிய திட்டம் எதுவும் இல்லை. அவருக்கு அந்த நாளில் தான் வெளியிட வேண்டும் என்று ஒன்றும் இல்லை
குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது ஒரு செட் மழை பெய்து நாசனமானது. அதனால் அங்கிருந்து இருந்து மொத்த லாரியும் வர வைத்து, முதல் நாள் எப்படி இருந்ததோ அதே போல் அடுத்த நாள் காலைக்குள் மாற்றிவிட்டனர்.
இந்த விஷயம் அஜித்திற்கு ஷுட்டிங் முடிந்த பிறகு தான் தெரிய வந்தது. அவர்கள் பயன்படுத்திய செட் மிகவும் விலையுர்ந்த ஒன்று. இதை பார்த்து அஜித் உற்சாகம் அடைந்துவிட்டார். 25 நாள் இவ்வளவு செலவு செய்து தயாரிப்பு நிறுவனம் செய்வது பெரிய விஷயம். அதனால் அஜித் மகிழ்ச்சி அடைந்தார் “ என்றார்.
நன்றி: Aadhan Cinema
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்