MGR Birthday: முன் பிறவியில் மகாராஜா குடும்பம்.. கைரேகை பார்த்து சொன்ன நடிகை.. சினிமாவில் இமேஜ் பார்த்த எம்ஜிஆர்
MGR Birthday: சினிமாவில் தனது இமேஜ் எப்படி இருக்க வேண்டும் என்பதை சரியாக பார்த்துக்கொள்ளும் எம்ஜிஆரை கைரேகை பார்த்து நடிகை ஒருவரை அவரது முன் பிறவி பற்றி சொல்லியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும், தமிழ் சினிமாவை சுமார் அரை நூற்றாண்டு காலம் வரை கட்டி ஆண்டவருமான எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் இன்று. இதை முன்னிட்டு எம்ஜிஆர் ரசிகர்கள் பலரும் அவரது படங்களை வைத்து மரியாதை செலுத்துவதோடு, எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் பாடல்களை ஒலிக்க வைத்து வருகின்றனர்.
இதையடுத்து சினிமா மூத்த பத்திரிக்கையாளரான வாமன் எம்ஜிஆர் பற்றி சுவாரஸ்ய் விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், எம்ஜிஆரின் முன் பிறவி பற்றி நடிகை பானுமதி அவரது கைரேகை பார்த்து சொன்ன விஷயத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வாமன் கூறியதாவது, "எம்ஜிஆர் மிக பெரிய கொடை வள்ளல் என அனைவருக்கும் தெரியும். சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் நிறைய பேருக்கு கொடை வழங்கினார்.
இமேஜ் மீது அக்கறை செலுத்தும் எம்ஜிஆர்
எம்ஜிஆர் நடித்த பெரும்பாலான படங்களில் அவரது ஹீரோ இமேஜை உயர்த்தி பாடும் பாடல்கள் அதிகமாக இடம்பிடிக்கும். அதற்கு காரணமாகவும் எம்ஜிஆர்தான் இருந்தார். இப்படித்தான் தான் இருக்க வேண்டும், மக்கள் தன்னை எப்படி அறிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்.
எம்ஜிஆர் என்றாலே நினைவுக்கு வரும் நான் ஆணையிட்டால் பாடல் ஆங்கில பாடலை மையப்படுத்திதான் உருவானது.வாலி எழுதிய இந்த பாடலில், நான் ஆணையிடுவேன். அது நடக்கும் என்றெல்லாம் எழுதாமல் வருங்காலத்தில் இப்படியெல்லாம் மாறும் என்பதை போல எழுதியிருந்தார்.
முன்பிறவியில் எம்ஜிஆர் வாழ்க்கை
அலிபாவும் 40 திருடர்களும் படத்தின் போது எம்ஜிஆருடன் இணைந்து நடித்த நடிகை பானுமதி, அவருக்கு கைரேகை பார்த்திருக்கிறார். பார்த்த மாத்திரத்தில் ஒரு நாள் எம்ஜிஆர் மிகப்பெரிய உச்சத்தை தொடுவார். அவருக்கான இடம் காத்திருக்கிறது என்றெல்லாம் கூறினாராம்.
அதேபோல் முன் பிறவியில் எம்ஜிஆர் ஒரு பெரிய மகாராஜா குடும்பத்தில் பிறந்தவராக இருக்கலாம். செல்வந்தராக இளவரசராக இருந்திருக்கலாம் என்று அவர் ஜாதகம் சொல்வதாக ஒரு பேச்சு இருந்திருக்கிறது. ஆனால் பானுமதி சொன்னதை போல ஒரு கட்டத்தில் தமிழக மக்களை சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி கட்டி ஆண்டார்.
ஒரு மிகப்பெரிய ஆளுமையாக பார்க்கப்பட்ட எம்ஜிஆர், சாதி மதம் பேதம் பார்க்காமல் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் கட்டியணைத்து தன் முத்த மழையை பொழிந்தார். குறிப்பாக வயதான தாய்மார்களை தன் தாய்க்கு நிகராக பார்த்த எம்ஜிஆர் அவர்களை கையெடுத்து கும்பிட்டு மரியாதை செய்வதை வழக்கமாக வைத்திருந்திருந்தார். இதன் காரணமாக பல வீடுகளில் எம்ஜிஆர் புகைப்படத்தை தெய்வத்துக்கு இணையாக மாற்றி வைத்து வணங்கி வருகிறார்கள்.
எம்ஜிஆருடன் இணைந்து அதிக படங்களில் நடித்த கதாநாயகிகளாக ஜெயலலிதா, சரோஜா தேவி இருக்கிறார்கள்.எம்.ஜி.ஆர் தன் தாய் மீது அளவற்ற அன்பு உண்டு என்பது உ லகறிந்த விஷயம். தான் சார்ந்த தொடர்பான முக்கிய முடிவுகளை தன் தாயின் படத்துக்கு முன் நின்று சொல்லியே முடிவெடுப்பார்" என்றார்.
1950களின் தொடக்கத்தில் இருந்து 1987இல் இறப்பதற்கு முன்பு வரையிலும் நடிகராக மக்களின் மனதில் இடம்பிடித்த எம்ஜிஆர், 1977 முதல் 1987 வரை தொடர்ந்து பத்து ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்தவர் என்ற பெருமையும் பெற்றவராக உள்ளார்.+

தொடர்புடையை செய்திகள்