Rajinikanth: ‘கங்கா’ காக்கும் ரஜினியின் பண்ணை வீடு; 3 வருடங்களுக்கு ஒரு முறை மாறும் வேலைக்காரர்கள்! - மர்மம் என்ன?
அந்த பண்ணை வீட்டில், நீச்சல் குளம் உட்பட அனைத்து வசதிகளும் இருக்கின்றன. அங்கே நாய் ஒன்று இருக்கிறது. அதற்கு பெயர் கங்காதரன். அதனை கங்கா என்று செல்லமாக அழைப்பார்கள்.

ரஜினியின் கேளம்பாக்கம் பங்களா குறித்து பத்திரிகையாளரான சபிதா ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ரஜினிக்கு கேளம்பாக்கத்தில் ஒரு பெரிய பண்ணை வீடு இருக்கிறது அந்த பண்ணை வீட்டில், நீச்சல் குளம் உட்பட அனைத்து வசதிகளும் இருக்கின்றன. அங்கே நாய் ஒன்று இருக்கிறது. அதற்கு பெயர் கங்காதரன். அதனை கங்கா என்று செல்லமாக அழைப்பார்கள்.
அந்த நாய் மிக உயரமாக இருக்கும். அந்த நாய் ரஜினி மீது மிகவும் பாசமாக இருக்கும். ரஜினி குளித்து விட்டு, புது ஆடைகளை அணிந்து வெளியே வரும்போது, ரஜினியை பிடித்துக் கொண்டு விளையாடும்.
அவர் போட்டு இருக்கும் ஆடையை அலங்கோலப்படுத்தும். இதனையடுத்து அந்த நாயிடம் ரஜினி ஓகே திருப்தியா என்று சொல்லிவிட்டு, மீண்டும் புது ஆடைகளை அணிந்து செல்வார். இரவு ஆனதும் அந்த நாயை அவிழ்த்து விட்டு விடுவார்கள்.
அந்த நாய் அந்த வீட்டை சுற்றிக் கொண்டே இருக்கும். அந்த வீட்டில் வேலை பார்ப்பவர்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, அந்த வீட்டை விட்டு வெளியே வர முடியாது. அவர்களுக்கு எந்தவித தொடர்பும் இருக்காது.
அந்த நபர்களை தொடர்பு கொள்ள வேண்டுமானால், ரஜினிக்கு நேரடியாக அழைப்பு செல்லும். அந்த அழைப்பின்படி, அவர்கள் பேசிக் கொள்வார்கள். இந்த நபர்கள் மூன்று, நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மாறிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் செல்லும் பொழுது, அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்து ரஜினி அனுப்புவார்.
ஆரம்ப காலத்தில் ரஜினி மிக அதிகமாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். அது தொடர்பான விஷயங்கள் அந்த பங்களாவில்தான் நடந்ததாக சொல்லப்படுகிறது. தெலுங்கு நடிகரான மோகன் தான் அவருக்கான ஜிகிரி தோஸ்த். அவரும் இவரும் தான் சேர்ந்து போடக்கூடாத ஆட்டம் எல்லாம் போடுவார்கள். அதில் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயமும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது” என்று பேசினார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்