தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Manorama Love: தெருவில் விட்டுச்சென்ற கணவன்.. கைபிடித்து வழி காட்டிய கண்ணதாசன்.. கோபி சாந்தா கோலிவுட் ஆச்சியான கதை!

Manorama Love: தெருவில் விட்டுச்சென்ற கணவன்.. கைபிடித்து வழி காட்டிய கண்ணதாசன்.. கோபி சாந்தா கோலிவுட் ஆச்சியான கதை!

Kalyani Pandiyan S HT Tamil
May 05, 2024 05:50 AM IST

பாடல்கள் அனைத்தும் நன்றாக மனப்பாடம் ஆகிவிட்டதால், அவர் நன்றாக பாடவும் ஆரம்பித்துவிட்டார். இது பலரையும் வியப்பிற்குள்ளாக்கியது. இதனையடுத்து சின்ன சின்ன கச்சேரிகளில் அந்த குழந்தையை பலர் பாட வைத்தார்கள்.

மனோரமா ஆச்சி கதை!
மனோரமா ஆச்சி கதை!

ட்ரெண்டிங் செய்திகள்

அதில் அவர் பேசும் போது, “ கோபி சாந்தாவின் அப்பா, திடீரென்று சித்தியை திருமணம் கொள்ள, இதில் கோபமான சாந்தாவின் அம்மா, குழந்தைகளை அழைத்துக்கொண்டு காரைக்குடி அருகே இருக்கக்கூடிய பள்ளத்தூர் என்ற ஊரிற்கு வந்து விடுகிறார்.

வீட்டில் கொடிய வறுமை. இதனால் கோபி சாந்தாவின் அம்மா, கோபியை, அருகில் உள்ள திரையரங்கில் இடைவேளையில் முறுக்கு விற்க அனுப்பினார். திரையரங்கில் அதிகப்படியான நேரம் செலவிட்ட சாந்தாவிற்கு, தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட பலர் பாடிய பாடல்கள் அனைத்தும் மனப்பாடமாக மாறிவிட்டது.

பாடல்கள் அனைத்தும் நன்றாக மனப்பாடம் ஆகிவிட்டதால், அவர் நன்றாக பாடவும் ஆரம்பித்துவிட்டார். இது பலரையும் வியப்பிற்குள்ளாக்கியது. இதனையடுத்து சின்ன சின்ன கச்சேரிகளில் அந்த குழந்தையை பலர் பாட வைத்தார்கள்.

பல கச்சேரிகளில் பாடிய கோபி சாந்தா, அதன் பின்னர் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். பல்வேறு நாடகங்களில் கதாநாயகியாக நடித்த அவர் ஒருகட்டத்தில் அண்ணா, கலைஞர், எம்ஜி ஆர், சிவாஜி என்டிஆர் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். 

ஒரு சமயத்தில், இவர் நடித்த அந்தமான் காதலி என்ற நாடகத்தை கண்ணதாசன் பார்க்க நேருகிறது. இதையடுத்து கண்ணதாசன் அவரை திரையுலகத்திற்கு அழைத்து வந்தார். அப்போது மாலையிட்ட மங்கை என்ற படத்தை அவர் எடுத்தார். அந்தப் படத்தில் அதுவரை கதாநாயகியாக நடித்த கோபி சாந்தாவை நகைச்சுவை நடிகையாக நடிக்க வற்புறுத்துகிறார். எதற்காக என்று சாந்தா எதிர்த்து கேள்வி கேட்க, கண்ணதாசன், நீ கதாநாயகியாக நடித்தால், குறைந்தபட்சம் 10 வருடங்கள் மட்டுமே இந்ததுறையில் பயணிக்க முடியும். ஆனால் நீ ஒரு நகைச்சுவை நடிகையாக நடிக்கும் பட்சத்தில், உனக்கு எல்லையை கிடையாது. நீ தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கலாம் என்ற ஆலோசனையை வழங்குகிறார்.

அந்த ஆலோசனையில், சாந்தாவிற்கு உடன்பாடு இல்லை என்றாலும், கண்ணதாசன் சொல்கிறாரே என்ற காரணத்திற்காக அதை ஏற்றுக் கொள்கிறார். அதன் விளைவு சாந்தா மனோரமவாக மறுவி, கிட்டத்தட்ட 1200 படங்கள், 5000 நாடகங்கள் என பரந்து நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே, ராமநாதன் என்பவர் உடன் அவருக்கு காதல் ஏற்பட, அவரையே கல்யாணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. எப்படி மனோரமாவின் அம்மா, கை குழந்தையை வைத்து இருக்கும் பொழுது, அவரது அப்பா விட்டு சென்றாரோ, அதேபோல மனோரமா கை குழந்தையை வைத்திருக்கும் பொழுது, ராமநாதன் விட்டுச் சென்று விட்டார். 

அவர் அப்படி விட்டுச் சென்றதற்கான காரணம் மிக மிக அபத்தமானது. அது என்னவென்றால், அந்த குழந்தை பிறந்த நேரம் அவருடைய உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடர் ஒருவர் சொன்னார் என்றும் அதற்காகத்தான் அவர் விட்டுச் சென்றார் என்று சொல்லப்படுகிறது. 

சின்னத்தம்பி படத்தில் அவர் ஒரு விதவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே, ராமநாதன் இறந்துவிட்டார். ஆனால் அவர் தனக்கும், தன்னுடைய குழந்தைக்கும் எந்தவிதத்திலும் உறுதுணையாக இருந்ததில்லை என்று சொல்லி, அவர் எந்தவித சடங்குகளையும் செய்ய மாட்டேன்; அவருக்காக நான் என்னை, எந்த விதத்திலும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று முற்போக்காக பேசினார். 

ஆனால், தன்னுடைய குழந்தைக்கு அப்பா என்ற காரணத்திற்காக,  மட்டும் தன்னுடைய மகனை ராமநாதனுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய அனுமதித்து இருக்கிறார்” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்