Premji: பழைய காதலியை கழட்டிவிட்டு இந்துவை திருமணம் செய்த பிரேம்ஜி? - வெளியான பரபரப்பான தகவல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Premji: பழைய காதலியை கழட்டிவிட்டு இந்துவை திருமணம் செய்த பிரேம்ஜி? - வெளியான பரபரப்பான தகவல்

Premji: பழைய காதலியை கழட்டிவிட்டு இந்துவை திருமணம் செய்த பிரேம்ஜி? - வெளியான பரபரப்பான தகவல்

Aarthi Balaji HT Tamil
Published Jun 15, 2024 05:57 AM IST

Premji: பிரேம்ஜியின் பழைய காதல் கதை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. பத்திரிகையாளர் பரமேஸ்வரன் இதை பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

பழைய காதலியை கழட்டிவிட்டு இந்துவை திருமணம் செய்த பிரேம்ஜி? - வெளியான பரபரப்பான தகவல்
பழைய காதலியை கழட்டிவிட்டு இந்துவை திருமணம் செய்த பிரேம்ஜி? - வெளியான பரபரப்பான தகவல்

களைகட்டிய திருமணம்

பிரேம்ஜியின் மனைவியின் பெயர் இந்து என்று வெங்கட் பிரபு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

நீண்ட நாட்களாக சிங்களாக இருந்த பிரேம்ஜி இப்போது திருமண வாழ்க்கையில் இணைந்து இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் பிரேம்ஜிக்கும், இந்துவிற்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இவர்களின் திருமணம் புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கரமித்து இருக்கிறது.

இந்து யார்?

45 வயதாகியும் ஏன் பிரேம்ஜி திருமணம் செய்யாமல் இருக்கிறார்? என்ற பேச்சு தான் எங்கு பார்த்தாலும் அவரை அனைவரும் கேட்பார்கள். ஆனால் தான் முரட்டு சிங்கிள் என நகைச்சுவையாக சொல்லிவிட்டு சென்றுவிடுவார். இதற்கு எல்லாம் விடை கொடுக்கும் வகையில் திடீரென பிரேம்ஜி திருமண அறிவிப்பு வெளியானது.

காதல் திருமணமா?

அதனால் ஒரு வேலை அவர் காதல் திருமணம் செய்து இருப்பாரோ என அனைவருக்கும் சந்தேகம் எழுந்து உள்ளது.

பிரேம்ஜி திருமணம் செய்து இருக்கும் மணப்பெண் இந்து யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இந்துவிற்கு சொந்த ஊர் சேலம் மாவட்டத்தில் உள்ளதாம். அவர் இதற்கு முன்பாக வங்கி துறையில் பணியாற்றி இருகிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இவர்கள் இருவருக்கும் 20 வயது வித்தியாசம் இருக்கும் என சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து தெரியவில்லை.

பிரேம்ஜியின் பழைய காதல்

இந்நிலையில் பிரேம்ஜியின் பழைய காதல் கதை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. பத்திரிகையாளர் பரமேஸ்வரன் இதை பேட்டியில் கூறினார்.

நடிகை மற்றும் தயாரிப்பாளராக அறியப்பட்ட சோனாவை பிரேம்ஜி காதலித்து வந்தார். பிரேம்ஜியின் தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன் அவர்களின் காதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். திருமணத்தில் முடிய இருந்த இந்த காதல் திருமணத்தில் முடிவடையாமல் போனதற்கு சோனா தானே காரணம் என சொல்லினார்.

சேர்ந்து வாழ்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றாலும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்தாள் சோனா. அவ்வாறானதொரு நிலையை இருவரும் அடைந்திருந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல பிரேம்ஜிக்கு திருமண ஆசை வந்தது.

சமூக ஊடகங்கள் மூலம் மலர்ந்த காதல்

கோவிட் சமயத்தில் சமூக ஊடகங்கள் மூலம் பிரேம்ஜியும் இந்துவும் ஒருவரையொருவர் அறிந்து கொண்டனர். விரைவில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதனால் பிரேம்ஜி தனது புதிய காதலால் மனம் மாறி திருமணம் செய்து கொண்டார். அதே சமயம் நடிகை சோனா இன்னும் திருமணமாகாமல் இருக்கிறார் “ என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.