தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Journalist Pandian Latest Interview About Ajith Kumar Shalini Unknown Love Story

Ajith Kumar: ஆண்மை இல்லையா என எழுதிய பத்திரிகை..பழிவாங்க அஜித் செய்தது என்ன? - நெகிழ்ச்சி சம்பவம்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 22, 2024 05:30 AM IST

அதன் பின்னர் அவர்கள் வளர்ந்தும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்கள். அந்த வகையில் தான் அமர்க்களம் திரைப்படத்தில் ஷாலினி கதாநாயகியாக கமிட் செய்யப்பட்டார் அந்த படத்தில் நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்த நிலையில், அவருக்கு முன்னதாக சுவாதி என்ற பெண்ணுடன் காதல் இருந்தது.

அஜித்குமார் காதல் கதை!
அஜித்குமார் காதல் கதை!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து பாண்டியன் பேசும் போது, “ஷாலினியின் அப்பா தசரதபுரத்தில் டீக்கடை வைத்திருந்தார். அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு மகனும் இருந்தார்கள். பெண்களை அவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்தினார். 

அதன் பின்னர் அவர்கள் வளர்ந்தும், சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்கள். அந்த வகையில் தான் அமர்க்களம் திரைப்படத்தில் ஷாலினி கதாநாயகியாக கமிட் செய்யப்பட்டார் அந்த படத்தில் நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்தார். அவருக்கு முன்னதாக சுவாதி என்ற பெண்ணுடன் காதல் இருந்தது.

ஆனால், அது கைகூடாத நிலையில், ஷாலினி மீது அஜித்திற்கு காதல் மலர்ந்தது. ஷாலினியை பொருத்தவரை அவருடன் அவரின் அப்பா பாதுகாப்பிற்காக எப்போதும் இருப்பார். 

நடிகர் அஜித் ஷாலினியின் அப்பாவிடம் சென்று, உங்களுடைய பெண்ணை தனக்கு கல்யாணம் செய்து கொடுங்கள் என்று கேட்டபோது, ஷாலினி அப்பா அஜித்திடம், தனக்கு ஒரு கோடி கொடுத்து விட்டு கல்யாணம் செய்து கொள் என்று சொல்லி இருக்கிறார். அதன் படி அஜித் அவருக்கு ஒரு கோடியும் கொடுத்திருக்கிறார். அதன் பின்னர்தான் கல்யாணம் நடந்தது.

அஜித்தை பொருத்தவரை அவருக்கு உதவும் குணம் அதிகம்.அது எந்த அளவுக்கு என்றால், அப்போது என்னுடைய நண்பரான விக்னேஷ் திரைச்சுவை என்ற பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருந்தார். 

அவர் பொதுவாகவே திரை பிரபலங்களை விமர்சித்து எழுதுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் அஜித்திற்கு திருமணம் ஆகி குழந்தைகள் பிறக்காத நிலையில், அவருக்கு ஆண்மையில்லை என்ற சந்தேகம் இருப்பதாக எழுதி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.  

இந்த நிலையில் விக்னேஷிற்கு திடீரென மாரடைப்பு வந்து விட விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனை தரப்பிலிருந்து இரண்டரை லட்சம் ரூபாயை உடனடியாக கட்டச் சொன்னார்கள். அஜித் உடனே ஓடி வந்து அந்த பணத்தை கட்டினார்

ஏன் இப்படி செய்தீர்கள் இந்த அஜித்திடம் கேட்ட பொழுது, அவரை பழி வாங்குவதற்கு இது நேரமல்ல; முதலில் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று சொன்னார்” என்று பேசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.