Premji Amaran: ‘வங்கி காகிதத்தில் மலர்ந்த காதல்.. 20 வயது வித்தியாசம்.. மணப்பெண் எடுத்த முடிவு! - பிரேம்ஜி காதல் கதை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Premji Amaran: ‘வங்கி காகிதத்தில் மலர்ந்த காதல்.. 20 வயது வித்தியாசம்.. மணப்பெண் எடுத்த முடிவு! - பிரேம்ஜி காதல் கதை!

Premji Amaran: ‘வங்கி காகிதத்தில் மலர்ந்த காதல்.. 20 வயது வித்தியாசம்.. மணப்பெண் எடுத்த முடிவு! - பிரேம்ஜி காதல் கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 13, 2024 05:30 AM IST

Premji Amaran: பிரேம்ஜியின் மனைவியான இந்து சேலத்தைச் சேர்ந்தவர். அவர் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார். அந்த வங்கியில் பிரேம்ஜி கணக்கு ஒன்றை வைத்திருந்து இருக்கிறார்! - பிரேம்ஜி காதல் கதை!

Premji Amaran: ‘வங்கி காகிதத்தில் மலர்ந்த காதல்.. 20 வயது வித்தியாசம்..  மணப்பெண் எடுத்த முடிவு! - பிரேம்ஜி காதல் கதை!
Premji Amaran: ‘வங்கி காகிதத்தில் மலர்ந்த காதல்.. 20 வயது வித்தியாசம்.. மணப்பெண் எடுத்த முடிவு! - பிரேம்ஜி காதல் கதை!

இது குறித்து அவர் பேசும் போது, “பிரேம்ஜி கல்யாணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியான உடனே, மணப்பெண் ஒரு பத்திரிக்கையாளர், நடிகை என பல்வேறு விதமாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அதனை மறுத்த இயக்குநர் வெங்கட் பிரபு, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனையடுத்து திருத்தணியில் இருவருக்கும் கல்யாணம் முடிந்தது. அதன் பின்னர்தான் மணப்பெண் இந்து பற்றி தெரிய வந்தது.

சேலத்தைச் சேர்ந்தவர்

பிரேம்ஜியின் மனைவியான இந்து சேலத்தைச் சேர்ந்தவர். அவர் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார். அந்த வங்கியில் பிரேம்ஜி கணக்கு ஒன்றை வைத்திருந்து இருக்கிறார். இந்த நிலையில், பிரேம்ஜி அங்கு சென்றபோது, இந்துவிற்கும் அவருக்கும் இடையே காதல் மலர்ந்து இருக்கிறது.  காதல் பெற்றோர் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களது சம்மதத்துடன் திருமணம் முடிந்திருக்கிறது. 

தற்போது பிரேம்ஜிக்கு 45 வயது. இந்துவிற்கு 25 வயது. கிட்டத்தட்ட 20 வயது வித்தியாசத்தில்தான் திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள். முக்கியமாக பிரேம்ஜியின் அம்மாவிற்கும், எனது மகனுக்கும் இன்னும் கல்யாணம் ஆகவில்லையே என்ற வருத்தம் இருந்ததாக தெரிகிறது. கூடுதல் தகவல் என்னவென்றால், தன்னுடைய அம்மாவுக்காகவாது கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று பிரேம்ஜி நினைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. திருத்தணியில் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பது மணப்பெண்ணின் முடிவு தான். அதனால்தான் அங்கு திருமணம் வைக்கப்பட்டது.” என்று பேசினார்.

முன்னதாக, பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் ஆகாயம் சினிமா சேனலுக்கு இந்த விவாகரம் பற்றி பேசிய தகவல்கள் இங்கே!

இளையராஜா ஏன் வரவில்லை

இது குறித்து அவர் பேசும் பொழுது, “இளையராஜாவுக்கும் கங்கை அமரனுக்கும் இடையே கடந்த ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பாகவே பிரச்சினை மூண்டது. அது வேறு ஒன்றும் இல்லை. எல்லாம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைதான். ஒரு கட்டத்தில் இளையராஜா தன்னுடைய இசையில் வெளியான பாடல்களை பொது வெளியில் பாடும் பொழுது, அதற்கான ராயல்டி தொகையை தனக்கு கொடுக்க வேண்டும் என்று இளையராஜா முறையிட்டார்.

நக்கீரனில் தொடர் ஒன்றை எழுதும் பொழுது, கங்கை அமரன் இளையராஜாவும், தானும் எந்தெந்த பாடல்களில் இருந்து மெட்டுக்களை திருடினோம் என்பது குறித்து ஒரு பட்டியலே போட்டு பேசியிருந்தார். அதே போல, ராயல்டி தொடர்பான பிரச்சனையின் போது, நாமே பல பிரபல இசையமைப்பாளர்களிடமிருந்து மெட்டுக்களை திருடி இருக்கிறோம். அப்படி இருக்கும் பொழுது நீ இப்படியான ஒரு ராயல்டி தொகையை கேட்பது எந்த விதத்தில் நியாயம். இப்படி பணத்தை சேர்த்து என்ன செய்யப் போகிறாய் என்று கொந்தளித்து பேசி இருந்தார். இவை இளையராஜாவிற்கு கடுமையான கோபத்தை உண்டாக்கியது.

ஒரு மண்டலம் பேசாமல் இருப்பார்.

இளையராஜாவைப் பொறுத்தவரை, சாதாரண சண்டையின் போதே கிட்டதட்ட ஒரு மண்டலம் பேசாமல் இருப்பார். அப்படி இருக்கும் பொழுது, இப்படிப்பட்ட ஒரு பெரிய பிரச்சினை பூதாகரமாக வெடித்திருக்கும் பொழுது இளையராஜா பேசுவாரா என்ன? இது தவிர அவரது மகள் பவதாரணி வேறு அண்மையில் உடல் நலக்குறைவால் காலமானார். அப்போது கங்கை அமரன் வீட்டில் இருந்து கொண்டே, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, பவதாரணி உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. இது தவிரவும் அவர்களுக்குளாக முட்டல் மோதல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.