கீர்த்தி சுரேஷ் புருஷன் ஒரு மிக்சர்.. தாலி ஆபாசப்பட்டு போச்சு.. வைரலாகும் சேகுவேரா கருத்து..
கீர்த்தி சுரேஷ் திருமணம் முடிந்த கையோடு அவரது பட புரொமோஷனில் கவர்ச்சியான உடையுடன் தாலி அணிந்து நடனமாடியதால் அந்த தாலிக்கு ஆபாசம் நேர்ந்துவிட்டது என பத்திரிகையாளர் சேகுவேரா சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 15 ஆண்டு கால காதலரை கடந்த டிசம்பர் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அவர் திருமணம் முடிந்த கையோடு ஹிந்தியில் அவர் நடித்துள்ள பேபி ஜான் படத்தின் புரொமோஷன் வேலைகளில் இறங்கினார்.
கவனத்தை ஈர்த்த கீர்த்தி
அந்த நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் மஞ்சள் தாலி அணிந்து வந்து அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார். மேலும், படத்தில் தன்னுடன் நடித்த நடிகர்களுடன் நடனமும் ஆடினார். இந்நிலையில், இதுகுறித்து பத்திரிகையாளர் சேகுவேரா சில சர்ச்சை கருத்துகளையும் பழமைவாத சிந்தனைகளையும் கிங்வுட் யூடியூப் சேனலில் வெளிப்படுத்தி உள்ளார்.
அந்த பேட்டியில், "சினிமாக்காரங்க காட்டுற பல சீன நான் பாத்துருக்கேன். ஆனா கீர்த்தி சுரேஷோட தாலி சீன் ரொம்ப ஓவரா இருக்கு. அந்த தாலி இந்த பொன்னுகிட்ட மாட்டிகிட்டு படாப்படுது.
தாலி ஆபாசப்படுது
கல்யாணம் முடிஞ்ச கையோட படத்தின் ப்ரமோஷனுக்கு போறதுல எந்த தப்பும் இல்ல. தாலி ரொம்ப பாரம்பரியமான பொருள். அத நீங்க ஏத்துகிட்டிங்கனா நீங்க பாரம்பரிய உடையத்தான் அணிஞ்சிருக்கணும். தொப்புள், இடுப்பு, முதுகுன்னு உடம்ப காட்டுற ட்ரெஸ் போட்டுட்டு தாலிய போட்டுட்டு போனா, அங்க ஆபசப்படுற பொருளா தாலி தான் இருக்கு.
கீர்த்தி புருஷன் ஒரு மிக்சர்
கீர்த்தி சுரேஷோட கணவர் இன்னொரு விக்னேஷ் சிவனா, இல்ல மிக்சரான்னு நமக்கு தெரியாது. மிக்சர்ன்னா பொண்டாட்டி பேச்ச கேட்டு நடக்குற ஆளுங்குற அர்த்தத்துல நான் சொல்றேன். மனைவிக்கு கொடுக்குற அன்பைத் தாண்டி அடிமையா இருக்கும் நபர்கள் எல்லாம் முழு மிக்சர்கள்.
கீர்த்தி சுரேஷுக்கு அவங்க வீட்ல இருக்கவங்க இதெல்லாம் சொல்லி புரிய வைக்கணும். அவங்க அம்மாவும் அப்படியான்னு தெரியல. அவங்க மேல எல்லாம் பெரிய மரியாதை இருக்கு. பாரம்பரியத்த மதிக்கிறோம் மதிக்கலன்னங்குறது விஷயமே இல்ல. ஆனா அத அசிங்கப்படுத்த கூடாது.
லிஸ்ட் போட்ட நயன்தாரா
நயன்தாரா லிவிங் டு கெதர் ரிலேஷன்சிப்பில் இருந்தேன்னு மெடல் குத்திகுற மாதிரி சொன்னாங்க. யாரு கூட இருந்தேன்னும் லிஸ்ட் போட்டாங்க.
இங்க நடிகைங்கள கல்யாணம் பண்ணிக்குற பெரும்பாலான தொழிலதிபர்கள் இழிச்சவாயனாகத் தான் இருக்காங்க. கீர்த்தி சுரேஷ் நேரடியா வலைப்பேச்சு பிஸ்மிக்கு போன் பண்ணி, என்ன பத்தி நிறைய வதந்தி எல்லாம் வந்துருக்கு. ஆனா நான் என் நண்பர 15 வருஷமா காதலிச்சு தான் திருமணம் பண்ணிருக்கேன். இத வச்சு எந்த வதந்தியும் பரப்பாம பாத்துக்கங்கன்னு சொன்னாங்களாம்.
இப்படியும் சில நடிகைங்க இருக்காங்க
கீர்த்தி சுரேஷ் மதத்வங்க கவனத்த தன் பக்கம் ஈர்க்கனும்ங்குறதுக்காகவே தாலி போட்டுட்டு நிகழ்ச்சிக்கு வந்தாங்க. அதே மாதிரி தான் நமீதாவும். அவங்க கர்ப்பமா இருந்த போட்டோவ யாரும் கேக்கல. ஆனா அத வெளிய விட்டு எல்லாரோட கவனத்தையும் இழுத்தாங்க. இவங்களுக்கு அப்படியே எதிரா இருக்கவங்க சிம்ரன். அவங்க நடிக்கும் போது எவ்ளோ கிளாமரா ட்ரஸ் போட்ருந்தாலும் இப்போ அவங்க பவுடர் கூட அடிக்குறாங்களான்னு தெரியல. அவங்க கர்ப்பமா இருக்கும் போது தான் சந்திரமுகி படத்துக்கான வாய்ப்பு அவங்கள தேடி போச்சு ஆனா இப்போ என்னால நடிக்க முடியாதுன்னு நேரடியாகவே சொல்லிடாங்க. சினிமாவுல இப்படியும் சில நடிகைங்க இருக்காங்க.
மானத்தோட வாழணும்
ஆனா, கீர்த்தி சுரேஷ் மாதிரியான ஆளுங்க பண்ற விஷயம் நேரடியா அவங்களோட கணவர பாதிக்குது. விக்னேஷ் சிவன எல்லாம் புஷ்பா புருஷன்னு சொல்றாங்க. நயன்தாராவ நேரடியா தாக்க முடியாததால விக்னேஷ் சிவன திட்றாங்க. கீர்த்தி சுரேஷ் பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில கிளாமரா ட்ரெஸ் போட்டுட்டு மஞ்ச தாலி போட்டுட்டு டான்ஸ் ஆடுனா எல்லாரும் கேட்கத்தான் செய்வாங்க.
கீர்த்தி சுரேஷ கல்யாணத்துக்கு முன்னாடி எவ்ளவோ அசிங்கப்பட்டுட்டாங்க. கல்யாணத்து அப்புறமும் இப்படி பண்ணுனா என்ன அர்த்தம். மானத்தோட வாழணும் தான எனக் கூறினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.