அமீரால் நகரும் காய்கள்.. வாடிவாசல் படம் நின்றுபோனதற்கு காரணம் சூர்யாவா? வெற்றிமாறனா? - பிஸ்மி பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அமீரால் நகரும் காய்கள்.. வாடிவாசல் படம் நின்றுபோனதற்கு காரணம் சூர்யாவா? வெற்றிமாறனா? - பிஸ்மி பேட்டி!

அமீரால் நகரும் காய்கள்.. வாடிவாசல் படம் நின்றுபோனதற்கு காரணம் சூர்யாவா? வெற்றிமாறனா? - பிஸ்மி பேட்டி!

HT Tamil HT Tamil Published Jun 22, 2025 04:41 PM IST
HT Tamil HT Tamil
Published Jun 22, 2025 04:41 PM IST

வாடிவாசல் திரைப்படம் நின்று போனதற்கு காரணம் அந்த திரைப்படத்தில் இயக்குநர் அமீர் இருப்பதுதான்.

கட்டிவைக்க முயன்ற கலைப்புலி.. பிய்த்துக்கொண்டு ஓடிய சிங்கம்…வாடிவாசல் படம் நின்றுபோனதற்கு காரணம் சூர்யாவா? வெற்றிமாறனா?
கட்டிவைக்க முயன்ற கலைப்புலி.. பிய்த்துக்கொண்டு ஓடிய சிங்கம்…வாடிவாசல் படம் நின்றுபோனதற்கு காரணம் சூர்யாவா? வெற்றிமாறனா?

இதற்கிடையே, அந்தப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மீண்டும் இருவரும் இணைவதை போட்டோ வெளியிட்டு உறுதிபடுத்தினார். இந்த நிலையில் இந்தப்படம் தற்போது மீண்டும் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

உண்மை என்ன?

இந்த நிலையில் இது குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி மீடியா சர்க்கிள் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, ‘வாடிவாசல் திரைப்படம் நின்று போனதற்கு காரணம் அந்த திரைப்படத்தில் இயக்குநர் அமீர் இருப்பதுதான். ஆம், இது சூர்யாவிற்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் அவர் இதனை பல்வேறு விதங்களில் வெற்றிமாறனுக்கு சொல்ல முயற்சித்து கொண்டிருந்தார்.

இதனை சூர்யா சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வெற்றிமாறனை சந்தித்து விஷயத்தை கூறினார். அவர் வெற்றிமாறன் அப்படியெல்லாம் மாற்ற முடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டார். அதன் பிறகு வெற்றிமாறன் கூறியதாக சொல்லப்படும் தகவல் என்னவென்றால், வாடிவாசல் திரைப்படத்தில் யார் யார் என்ன கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன் தவிர, நடிகர் முடிவு செய்ய முடியாது என்று கூறினாராம்.

தனுசிடம் சென்ற வாடிவாசல்

இதற்கிடையே இந்தக்கதை தனுசிடமும் சென்றது. இதைக்கேட்ட தனுஷ் நீங்கள் எப்போது கூப்பிட்டாலும் என்னுடைய எல்லா விஷயங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு, அந்த படத்திற்கு வருவதற்கு தயாராக இருக்கிறேன் என்று உத்தரவாதம் கொடுத்து விட்டார்.

வெற்றிமாறனுக்கு அமீர் இருக்கும் வரை வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்க மாட்டார் என்பது நன்றாகவே தெரியும். ஆனால், அவர் சூர்யாவாகவே அந்தப்படத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று நினைக்கிறார். இந்தப்பக்கம் சூர்யா பல டைரக்டர்களை நாம் நிராகரித்து விட்டோம் ஆகையால், வெற்றிமாறனே அந்தப்படத்தில் இருந்துவெளியே செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இதுதான் வாடிவாசல் படம் நின்று போனதற்கு காரணம்’ என்று பேசினார்.