சைடு கேப்பில் சிந்து பாட நினைத்த விக்னேஷ் சிவன்.. பிடி கொடுக்காத தனுஷ்.. மிரட்டல் விடுத்த நயன்! - உண்மையை உடைத்த பிஸ்மி
தனுஷ் - நயன் தாரா பிரச்சினையில் தனுஷ் தரப்பு விளக்கத்தை பிரபல தயாரிப்பாளர் பிஸ்மி உடைத்து இருக்கிறார்.
இன்று காலை தனுஷ் மீது பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நயன்தாரா தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. இந்த அறிக்கை தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் நயன்தாரா தரப்பு நியாயம் மட்டுமே இருக்கும் நிலையில், தனுஷ் தரப்பு எந்தவித பதிலையும் கூறவில்லையே என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்து இருந்தது.
இந்த நிலையில் இது குறித்து பிரபல வலைத்தளமான வலைப்பேச்சு தளத்தில், தனுஷ் தரப்பில் ஏன் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து பத்திரிக்கையாளர் பிஸ்மி விரிவாக பேசியிருக்கிறார் அந்த பேட்டியை தற்போது பார்க்கலாம்.
இது குறித்து அவர் பேசும் பொழுது," நானும் ரவுடிதான் திரைப்படத்தை தனுஷ் தான் தயாரித்திருந்தார். அந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க,.விக்னேஷ் சிவன் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படப்பிடிப்பின் பொழுது நயன்தாராவுக்கும் விக்னேஷ் அவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
ஒரு கட்டத்தில் அந்த காதல் பற்றி கொண்டு எறிய,.விக்னேஷ் சிவன் படப்பிடிப்பில் கவனம் செலுத்தாமல் காதலில் கவனம் செலுத்தினார். இதனால் படத்தின் பட்ஜெட் எகிறி விட்டது..இதில் கடுப்பான தனுஷ் இனி நான் படத்திற்கு ஒரு பைசா கூட தர மாட்டேன்; படத்தை முடிந்தால் முடியுங்கள்; இல்லை என்றால், படத்தை நான் நிறுத்தி விடுகிறேன் என்று கறாராக கூறிவிட்டார்.
பிரச்சினையில் தலையிட்ட நயன்!
இந்த நிலையில் நயன்தாரா பிரச்சினையில் தலையிட்டு, அவர் தன்னுடைய பணத்தை போட்டு அந்த படத்தைப் போட்டு முடிக்க உதவி செய்தார்.
இந்த பிரச்சினையின் வழியாக, நயன்தாராவிற்கும், தனுஷிற்கும் இடையே மிகப்பெரிய விரோதம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. ஆனால் இரு தரப்புமே அதை வெளியே அப்பட்டமாக காண்பிக்காமல், சுமூகமாகச் சென்று கொண்டிருந்தார்கள். இந்த நிலையில்தான் விக்னேஷ் சிவன் நயன்தாரா தரப்பு, netflix நிறுவனத்துடன் தன்னுடைய ஆவணப்படத்தை எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால், அந்த ஆவணப்படம் உருவாகி நீண்ட நாட்களாக வெளியே வராமலேயே இருந்தது அதற்கு காரணம் தனுஷ்தான். அந்த ஆவணப் படத்தில் தனுஷின் நானும் ரவுடிதான் திரைப்படம் தொடர்பான பல காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் தனுஷ் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இந்த நிலையில் அது கிடப்பிலேயே போடப்பட்டது இப்போது நயன்தாரா தரப்பு, சட்டவிரோதமாக நானும் ரவுடிதான் திரைப்படம் தொடர்பான காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறது.
மேலும் இது தொடர்பான எந்த விவாதமாக இருந்தாலும், நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று பதிவிட்டும் சவாலும் விட்டு இருக்கிறது.
யார் குற்றவாளி?
இன்று நயன்தாரா வெளியிட்ட அறிக்கையை பார்க்கும் பொழுது நயன்தாரா என்னவோ அப்பாவி போலவும், தனுஷ் மிகப்பெரிய குற்றவாளி போலவும் தோன்றலாம். ஆனால் உண்மையில் நடந்தது வேறு; ஆம், திரை மறைவில் நிறைய விஷயங்கள் நடந்திருக்கின்றன.
நயன்தாரா தரப்பு, நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து பாடல்களையோ காட்சிகளையோ பயன்படுத்த வேண்டுமென்றால் நேரடியாக தனுஷை தொடர்பு கொண்டு, முறையாக அனுமதி கேட்டு இருக்கலாம். ஆனால்,அது நடக்கவில்லை;
இதில், விக்னேஷ் சிவன் ஒரு பயங்கரமான வேலை பார்த்து இருக்கிறார்; தனுஷின் மேனேஜரான ஸ்ரேயாஸ் விக்னேஷ் சிவனுக்கும் நண்பர். அவர் ஒருநாள் அவருக்கு போன் செய்து மிகவும் சகஜமாக பேசுவது போல, நானும் ரவுடிதான் படம் தொடர்பான காட்சிகளை நான் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒரு மெயில் போடு என்று சொல்லிவிட்டு சாப்பிட்டியா... நன்றாக இருக்கிறாயா..? என்று கேட்டு உடனடியாக போனை கட் செய்துவிட்டாராம்;
ஆனால் ஸ்ரேயாஸ் மெயிலை அனுப்பவே இல்லை. இந்த நிலையில் நான்கு நாட்கள் கழித்து மீண்டும் போன் செய்து ஏன் மெயில் அனுப்பவில்லை என்று விக்னேஷ் சிவன் கேட்டிருக்கிறார்.அதற்கு ஸ்ரேயாஸ்,.தனுஷ் சாரை கேட்காமல் நான் எப்படி அனுப்ப முடியும் என்று அவர் சொல்லி, அவரிடம் கேட்டுவிட்டு உனக்கு தகவல் சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு விக்னேஷ் சிவன் அவரிடம் எதற்கு இதையெல்லாம் கொண்டு செல்ல வேண்டும்; நீயே அனுப்பிவிடு என்று வற்புறுத்தி இருக்கிறார்.
ஆனால், மிகவும் ஸ்ரேயாஸ் உஷாராக முடியாது என்று சொல்லி இதை தனுஷிற்கு கொண்டு சென்றுவிட்டார்; ஆனால்,.தனுஷ் முடியாது என்று கூறிவிட்டார். இந்த நிலையில் தனுசுக்கு பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுப்பதற்கான வேலைகளை நயன்தாரா தரப்பு செய்திருக்கிறது. அது அரசியல் ரீதியாக இருந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் கடைசிவரை தனுஷ் அசரவே இல்லை. இவ்வளவு.அடம் பிடித்து.ஏன் அந்த படத்தில் உள்ள காட்சிகள்,.வரிகளை கேட்கிறார்கள் என்றால், நயன்தாராவுக்கும் விக்னேஷ் இவனுக்கும் இடையே காதல் பூத்த தருணத்தில், அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் எழுதப்பட்டன..அதனால் அதன் பாடல்கள் இல்லாமல் நயன்தாராவின் ஆவணப்படம் முழுமை அடையாது என்பதே அதற்கான முழு காரணம்.
ஒரு கட்டத்தில், எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்று தெரிந்தவுடன் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும்,.அதன் மூலம் தனுஷின் இமேஜையை காலி செய்ய போவதாகவும் மிரட்டி இருக்கிறார்கள்.
இதையடுத்து தான் தனுஷ் கோபமடைந்து அவர்கள் செய்வதை செய்யட்டும் என்று சென்றுவிட்டார். இதற்கிடையே நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தின் படி ஆவணப்படம் வெளியாவதில் சிக்கல் இருப்பதால், கொடுத்த தொகையை திருப்பி கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே தனுஷும் நயன்தாராவின் ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் பட காட்சிகள் இடம் பெற்றிருப்பது தொடர்பாக 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆக, இரண்டு வியாபாரிகளுக்குள் நடந்த இந்த பிரச்சனைக்கு, வேறு கலர் பூசி, இதை வெளியே காண்பித்திருக்கிறார் நயன்தாரா. " என்று பேசி இருக்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்