விஜய் படத்தில் சத்யராஜ் நடிக்க மறுத்த காரணம்.. காரணங்களை எடுத்துரைத்த பத்திரிகையாளர் பிஸ்மி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விஜய் படத்தில் சத்யராஜ் நடிக்க மறுத்த காரணம்.. காரணங்களை எடுத்துரைத்த பத்திரிகையாளர் பிஸ்மி

விஜய் படத்தில் சத்யராஜ் நடிக்க மறுத்த காரணம்.. காரணங்களை எடுத்துரைத்த பத்திரிகையாளர் பிஸ்மி

Marimuthu M HT Tamil
Nov 14, 2024 11:03 PM IST

விஜய் படத்தில் சத்யராஜ் நடிக்க மறுத்த காரணம்.. காரணங்களை எடுத்துரைத்த பத்திரிகையாளர் பிஸ்மியின் பேட்டியைக் காணலாம்.

விஜய் படத்தில் சத்யராஜ் நடிக்க மறுத்த காரணம்.. காரணங்களை எடுத்துரைத்த பத்திரிகையாளர் பிஸ்மி
விஜய் படத்தில் சத்யராஜ் நடிக்க மறுத்த காரணம்.. காரணங்களை எடுத்துரைத்த பத்திரிகையாளர் பிஸ்மி

இதுதொடர்பாக மீடியா சர்க்கிள் யூட்யூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’ கமல்ஹாசன் தன்னுடைய பெயருக்கு முன் அடைமொழி வேண்டாம் என்று கூறியிருப்பது சரியான முடிவு தான். ஆனால், தாமதம் ஆன முடிவு. எந்தத் துறையில் இருந்தவர்களும் பெயருக்கு முன்னால் அடைமொழி இட்டுக்கொண்டது இல்லை. ஆனால், சினிமாத் துறையில் இருப்பவர்கள் மட்டும் அவ்வாறு அடைமொழி இட்டுக்கொண்டனர். தொங்கு சதைபோன்ற அடைமொழி இவர்களுக்கு காலாகாலமாக அவசியமாக இருந்தது. இதெல்லாம் தேவையில்லை.

இந்த அடைமொழியெல்லாம் ரசிகர்கள் இடையே ஒரு வெறித்தனத்தை உண்டு செய்கிறது என்பதை புரிந்தாலும், ஏதோ ஒரு வகையில் இவர்களே அதை ஊக்குவித்துக்கொண்டு ரசித்துக்கொண்டும் இருந்தார்கள். அதனால் தான் நேற்று சினிமாவில் வருபவர்கள் கூட, இரண்டாவது சினிமாவில் அடைமொழி ஒட்டி, போஸ்டர் ஒட்டுவதைக் காணமுடிகிறது. இந்தச் சூழ்நிலையில் அஜித் என்பவர் இந்த விஷயத்தை முதன்முதலில் ஆரம்பித்தார்.

அஜித் பேச்சைக் கேட்காத அவரது ரசிகர்கள்:

தன்னை அஜித் குமார் என்றே கூப்பிடுங்கள், தல என கூப்பிடாதீர்கள் எனக் கூறினார். அவ்வாறு இல்லையெனில் ஏ.கே. எனக் கூப்பிடுங்கள் என தனது ரசிகர்களிடத்தில் கேட்டுக்கொண்டார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரது ரசிகர்களே அதைக் கேட்கவில்லை, மதிக்கவில்லை என்பது தான் உண்மை. அதற்குக் காரணம் என்னவென்றால், அந்த வெறித்தனத்தை பைத்தியக்காரத்தனத்தை நீங்கள் தான் வளர்த்தது. நீங்கள் வளர்த்து அது முற்றிப்போன நிலையில் அதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. கிட்டத்தட்ட கமல்ஹாசனும் அதே மாதிரியான ஓர் அறிவிப்பை விட்டிருக்கிறார். தாமதமான அறிவிப்பாக இருந்தாலும், அது ஒரு சரியான நடவடிக்கையாகத் தான் நான் பார்க்கிறேன். கமல்ஹாசன் மாதிரியான ஒரு சீனியர் நடிகர் இவ்வாறு செய்யும்போது, எதிர்காலத்தில் சினிமாவுக்கு வருபவர்கள் நம் பெயர் முன் ஒரு அடைமொழி வேண்டாம், நாம் மதிக்கும் கமல்ஹாசன் போன்றவர்களே இந்தப் பட்டத்தைத் துறந்து இருக்கிறார் எனப் புரிந்துகொள்ளலாம். அந்த வகையில் இது வரவேற்கக் கூடியது தான்.

கமல்ஹாசனுக்கு இதன்மூலம், புகழ் கிடைக்கும் என்று சொல்வது எல்லாம் ஒரு அவதூறான குற்றச்சாட்டாகத் தான் நான் பார்க்கிறேன்.

கமல்ஹாசன் தரப்பில் நான் பேசியபோது, கடந்த இரண்டு வருடங்களாகவே, கமல்ஹாசனுக்கு இந்த நினைப்பு இருந்து இருக்கிறது. போன பிறந்த நாளிலேயே இதை அறிவிக்க நினைத்தபின், சில காரணங்களால் அறிவிக்காமல் இருந்துவிட்டார். அதனால், இந்த பிறந்த நாளில் அறிவிக்க முயற்சித்து இருக்கிறார். அப்போது அவர்கள் பிறந்த நாள் அதுவுமாக இப்படி செய்யாமல், இன்னொரு நாளில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இதைப் பாராட்டலாம்.

ஆனால், ரஜினி, கமல்ஹாசனை பின்பற்றமாட்டார். ஏனென்றால், அவர் பணம் வந்தால் நிம்மதி போய்டும்ன்னு சொல்வார். மறுபக்கம்,ஓடாதபடத்துக்கும் சம்பளத்தைக் கூட்டி வாங்குவார், ரஜினி.

விஜய் படத்தில் சத்யராஜ் நடிக்க மறுத்த காரணம்:

விஜய் படத்தில் சத்யராஜ் நடிக்க மறுக்க சம்பளம் காரணமாய் இருந்திருக்கலாம். கொள்கை சார்ந்து இயங்கக் கூடிய சத்யராஜ், அன்றைய காவிரி பிரச்னை உச்சத்தில் இருந்த காலத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் நடிக்க மறுத்தார்.

கூலி படத்தில் அதே ரஜினியுடன் சத்யராஜ் நடிக்கிறார். இன்றைய சூழல் வேறு, வயது தந்த பக்குவம், சம்பளம் ஆகியவற்றின் காரணமாக, ’கூலி’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

சத்யராஜ் ஆதரிக்கிறது, இன்றைய திமுக அரசை தான். விஜய் திமுகவை நேரடியாக கட்சி ஆரம்பித்து விமர்சித்தார். இதனால் திமுகவின் கோபப்பார்வைக்கு விஜய் ஆளாகியுள்ளார். அவர் கூட நடித்தால், ஸ்டாலின் குடும்பம் நம்மை தவறாக நினைக்க வாய்ப்புள்ளது என நினைக்கலாம். இவையெல்லாம், நம் அனுமானம். சினிமாக்காரர்கள் அரசியல் மேடைகளில் வேறு ஒரு நபராகவும், சினிமாவில் நடிக்கும் காட்சிகளில் இன்னொரு நபராகவும் இருப்பர். அதன்படி பார்த்தால் சத்யராஜ் சம்பளப் பிரச்னையால் தான், விஜய் படத்தில் நடிக்காமல் இருப்பார்’’ என மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

நன்றி: மீடியா சர்க்கிள்

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.